
வெள்ளை சிங்கங்கள் ஒரு தனித்துவமான மரபணு மாற்றத்தின் காரணமாக பிறக்கும் சிங்கங்களாகும். இது சாதாரண சிங்கங்களின் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தை அளிக்கிறது. இவை ஆப்பிரிக்காவில் குறிப்பாக திம்பாவதி இயற்கை காப்பகம் போன்ற இடங்களில், இயற்கையான சூழலில் காணப்படுகின்றன.
பல வெள்ளை சிங்கங்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வளர்க்கப்படுகின்றன. தனியார் காப்பு நிறுவனங்களில் வளர்க்கப்படும் இவை பிற சிங்கங்களுடன் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. இதனால் மேலும் வெள்ளை சிங்கங்கள் பிறக்கின்றன.
வெள்ளை சிங்கம் என்று ஒரு இனம் இருப்பது 1970 ஆம் ஆண்டுகளில் இதைக் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்ட பொழுது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்பே வெள்ளை சிங்கங்கள் இருந்துள்ளது. ஆனால் அதை யாரும் நம்பாமல் இது ஒரு கட்டுக்கதை என கருதினர்.
'லூசிசம்' என்னும் ஜீன் மாற்றம் காரணமாகத்தான் சிங்கங்கள் அதன் இயல்பான நிறத்தை விட்டு அரிதாக வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது என்று கூறப்படுகிறது. அரிதான இந்த நிற சிங்கங்கள் இந்தியா, தெற்கு ஆப்பிரிக்கா, சாபேளா போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.
இதன் தோற்றம் கம்பீரமாக இருப்பதற்குக் காரணம் அதனுடைய தாடிப்பகுதியும் அதன் வலிமையான மற்றும் கூர்மையான பற்களும் இருப்பதால்தான். இவை 120 கிலோ முதல் 191 கிலோ வரையில் இருக்கிறது.
இந்த வெள்ளை சிங்கங்களின் வேட்டையாடும் திறனும் மிகவும் சிறப்பாக உள்ளது. இவை சிறப்பான வேட்டையாடும் திறனுடன் புத்திசாலித்தனமாக செயல்படும் திறனையும் கொண்டுள்ளது. வெள்ளை நிற சிங்கங்களின் உடல் கட்டமைப்பும் அனைத்து சிங்கங்களைப் போல் தான் காணப்படுகிறது. அதே நடத்தை, உணர்வுகள் மற்றும் திறமைகளைக் கொண்டுள்ளன.
இவற்றின் கர்ப்ப காலம் 110 நாட்கள். ஒரு பிரசவத்தில் ஒன்று முதல் நான்கு குட்டிகள் வரை போடும். அதன் குட்டிகளை பாதுகாக்கும் பொறுப்பு பெண் சிங்கங்களுக்கு தான் உள்ளது. அவையே பிறந்த குட்டிகளை பாதுகாக்கின்றன.
மற்ற சிங்கங்களைவிட இந்த வெள்ளை இன சிங்கத்தின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த இனத்தை பாதுகாக்கப்பட்ட ஒரு இனமாக கருதப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 10 முதல் 14 ஆண்டு காலம் வரை. இதன் உயரம் 1.2 மீட்டர் உயரமும், 3.5 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளன.