வாசனை மூலம் இரையைத் தேடி வேட்டையாடும் பறவைகளின் அதிசய உலகம்!

Amazing birds that find prey by scent
turkey vulture
Published on

றைவனின் படைப்பில் ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் மிகவும் அதிசயமானவை. பறவைகளில் சில தனித்துவமான திறன்களைப் பெற்று விளங்குகின்றன. அதிலும் நெடுந்தொலைவில் உள்ள தனது இரையை தமது வாசனைத் திறனைக் கொண்டு கண்டுபிடித்து உணவாக எடுத்துக் கொள்ளும் அற்புதமான சில பறவைகளும் இருக்கின்றன. அப்படி வாசனைத் திறன் அதிகம் கொண்ட சில பறவைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. டர்கி வல்ச்சர் (Cathartes aura): வட மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும். பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாக்கடிப்பிணத்தின் வாசனையை உணர்ந்து பறந்து வந்து உணவாக உண்ணும் பறவை இது.

2. கிவி (Apteryx spp.): நீண்ட மூக்கின் முனையில் இருக்கும் நாசி மூலம் மண்ணுக்குள் இருக்கும் புழுக்கள், பூச்சிகள், வேர்கள் போன்றவற்றின் வாசனையை கண்டுபிடித்து உண்ணும் நியூசிலாந்து பறவை இது.

இதையும் படியுங்கள்:
யானையின் வழித்தடம் மற்றும் வாழ்விடங்களை அழிக்க வேண்டாமே!
Amazing birds that find prey by scent

3. நியூசிலாந்து காக்கா (Nestor meridionalis): மண்ணிலும் மரத்திலும் உள்ள உணவை வாசனையால் கண்டுபிடித்து உண்ணும் பறவை இது. நியூசிலாந்து காட்டுப்பழங்கள், தேன், மரத்துக்குள் இருக்கும் பூச்சிகள் போன்றவற்றை வாசனையால் இவை தேடும்.

4. ஆல்பட்ராஸ் (Diomedea spp.): தெற்கு பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் ‘டைமெத்தில் சல்ஃபைடு’ (DMS) வாசனையை உணர்ந்து மீன்கள், கிரில், பிளாங்க்டன் போன்றவை இருக்கும் இடத்தை தனது வாசனைத் திறனால் இவை கண்டுபிடிக்கும்.

5. ப்ரோசெலேரியா (Procellaria spp.): தெற்கு மற்றும் வட பசிபிக், அட்லாண்டிக் கடல் மேற்பரப்பில் சிறிய உயிரினங்களின் வாசனையை உணர்ந்து துல்லியமாக வேட்டையாடும் பறவை இது.

இதையும் படியுங்கள்:
இமயமலை வெறும் மலையல்ல; அது ஒரு அதிசயத்தின் வரலாறு!
Amazing birds that find prey by scent

6. ஷியர் வாட்டர் (Puffinus spp.): உலகின் பல கடல் பகுதிகளில் நீண்ட தூரத்தில் இருந்து உணவுப் பொருட்களின் ரசாயன வாசனையைப் பின்தொடர்ந்து சென்று தனது உணவு தேடுதல் வேட்டையைத் தொடரும் பறவை இது.

7. ஹூடட் வல்ச்சர் (Necrosyrtes monachus): ஆப்பிரிக்காவில் வாழும் சாக்கடிப் பறவை இது. காடுகளிலும் புல்வெளிகளிலும் பிணங்களைத் தேட தனது வாசனை உணர்வைப் பயன்படுத்தும் பறவை.

8. கியூபா சாலோ (Zapata rail): கியூபா தீவின் ஈர நிலப்பகுதியில் உள்ள புழுக்கள் மற்றும் சிறிய நீர்வாழ் உயிரிகளை தனது வாசனை உணர்வால் கண்டுபிடிக்கும் பறவை இது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

9. ப்ளூபெட் பூபி (Sula nebouxii): பசிபிக் பெருங்கடலில் வாழும் மீன் கூட்டங்களை கண்டுபிடிக்க, வானில் இருந்தபடியே வாசனையை அடையாளம் காணும் திறன் கொண்ட பறவை இனம் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com