டைனோசர் இனத்தை அழித்த அந்த விண்கல் விழுந்த இடத்தை பாருங்கள்!

Chicxulub
Chicxulub
Published on

நாம் திரைப்படங்களில் பார்த்து வியந்த  பிரம்மாண்ட டைனோசர்கள் இன்று பூமியில் இல்லை என்பது சற்று சோகமான விஷயமே. சுமார் 66 மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு வரை உலகையே ஆட்டிப்படைத்த அந்த இனம், கண்மூடி திறக்கும் நேரத்திற்குள் கூண்டோடு அழிந்துபோனது. 

விண்வெளியில் இருந்து வந்த ஒரு ராட்சச பாறைதான் அவற்றின் அழிவுக்குக் காரணம் என்பது நமக்குத் தெரிந்த ஒரு பழைய வரலாறு. ஆனால், அந்தப் பாறை பூமியில் சரியாக எந்த இடத்தில் விழுந்தது, அந்த இடத்தின் தற்போதைய நிலை என்ன என்பது பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான தகவல். அதைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

டைனோசர்களின் அழிவு! 

வானத்தில் இருந்து விழுந்த அந்த விண்கல் ஒன்றும் சாதாரணமான கல் கிடையாது. சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு பிரம்மாண்டமான மலை போன்ற பாறை. அந்தப் பாறை பூமியைத் தாக்கிய வேகம், கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரமானது. வினாடிக்கு சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் அது பூமியைப் பதம் பார்த்தது. 

இந்த மோதலின் வீரியத்தை எளிதாக சொல்ல வேண்டும் என்றால், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு களைப் போல சுமார் 1000 கோடி குண்டுகளை ஒன்றாக வெடித்தால் எவ்வளவு சக்தி வெளிப்படுமோ, அந்த அளவுக்கு ஆற்றல் அந்த ஒற்றை மோதலில் வெளியானது.

மர்ம பள்ளம் எங்கே உள்ளது?

இவ்வளவு பெரிய கல் விழுந்தால், பூமியில் ஒரு பெரிய ஓட்டை விழுந்திருக்க வேண்டுமே என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மைதான், அந்தப் பள்ளம் இன்றும் இருக்கிறது. மெக்சிகோ நாட்டில் உள்ள யுகடன் தீபகற்பத்தின் வடக்கே, கடலுக்கு அடியிலும் மண்ணுக்குள்ளும் அந்த பிரம்மாண்ட பள்ளம் மறைந்து கிடக்கிறது. அந்த இடத்திற்கு அருகில் உள்ள 'சிக்ஸுலப்' (Chicxulub) என்ற ஊரின் பெயரையே அந்தப் பள்ளத்திற்கும் வைத்துவிட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
பாவம் தீர்க்குமா கங்கை நீராடல்: சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் மர்மம்!
Chicxulub

இந்த பள்ளத்தின் அகலம் மட்டும் சுமார் 180 முதல் 200 கிலோமீட்டர் வரை இருக்கும். 1970களின் இறுதியில் தான், புவியியல் நிபுணர்கள் கடலுக்கு அடியில் ஈர்ப்பு விசை மற்றும் பாறைகளின் அமைப்பை ஆராய்ந்து இந்த இடத்தை உறுதி செய்தனர். ஆழ்துளை மூலம் ஆராய்ந்தபோது, அங்குள்ள பாறைகள் மற்றும் குவார்ட்ஸ் கனிமங்கள் அதிகப்படியான வெப்பத்தால் உருகி உருமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த விண்கல் விழுந்ததும், பூமியில் இருந்த 75 சதவீத உயிரினங்கள் அடியோடு அழிந்துவிட்டன. கல் விழுந்த வேகத்தில், பாறைகளும் தூசிகளும் வளிமண்டலம் முழுவதும் பரவி, சூரிய ஒளியையே தடுத்துவிட்டன. பல வருடங்களுக்குப் பூமி இருளிலேயே தவித்தது. வெளிச்சம் இல்லாததால் மரங்கள் கருகின, உணவுச் சங்கிலி முற்றிலுமாக அறுந்துபோனது. இந்த மாபெரும் அழிவைத்தான் அறிவியலாளர்கள் கே-பிஜி (K-Pg) அழிவு என்று குறிப்பிடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வரலாற்றில் முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு..!
Chicxulub

காலநிலைகள் எப்படி மாறுகின்றன என்பதை அறிய விஞ்ஞானிகள் இன்றும் இந்த இடத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com