வீட்டில் தோட்டம் இல்லையே என்ற கவலை வேண்டாம்: உடல் ஆரோக்கியம் காக்க இந்த 5 மரம் போதும்!

Trees to grow at home
Vazhai, Murungai, Thennai
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

இன்றைய நகர வாழ்க்கையில் பெரும்பாலும் இடப்பற்றாக்குறை காரணமாக தோட்டம் இல்லாத வீடுகளையே பரவலாகக் காண முடிகிறது. ஆனால், வீடு என்பது பலரும் நினைப்பது போல வெறும் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அமைப்பல்ல! தோட்டம் சூழ இருப்பதுதான் வீடு! இருக்கும் இடத்தில் இயன்றவரை சில முக்கியமான மரங்களை வீட்டைச் சுற்றி வளர்ப்பது நமக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கும். அந்த வகையில் வீட்டிற்கு பயன் தரும் 5 வகை மரங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. வாழை: வாழையின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை, தண்டு, சாறு ஆகிய அனைத்துமே மருத்துவ குணமுடையவை. வாழையிலையில் தினமும் உணவைச் சுடச்சுட பரிமாறி சாப்பிடுவதன் சிறப்புகள் சொல்லி மாளாது. எண்ணிலடங்காத நன்மைகளை அள்ளித் தரும் வாழை மரங்களை வீட்டின் தண்ணீர் செல்லும் இடங்களில், நல்ல சூரிய ஒளி படும் இடங்களைத் தேர்வு செய்து வைக்க வேண்டும். விருந்து முதல் மருந்து வரை அனைத்தையும் வாரி வழங்கும் வாழை மரம் கட்டாயம் நம் தோட்டத்தில் இடம்பெற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலைக் காக்கும் சூப்பர் ஹீரோ வௌவால்கள்!
Trees to grow at home

2. முருங்கை: வீட்டின் பின்புறத்தில் வைக்க வேண்டிய மரம் முருங்கை. ஏராளமான நன்மைகள் மிகுந்த இந்த முருங்கை மரம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் ரத்த சோகை, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மை அண்டாது. முருங்கைக் கீரையும், முருங்கைக்காயும் மருத்துவ ரீதியாக பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.

3. வேப்பமரம்: வீட்டின் முன்புறம் வைக்க வேண்டிய மரம் வேப்பமரம். பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக உள்ள வேப்பமரத்தின் கசப்புத் தன்மை நோய் கிருமிகளை வீட்டிற்குள் அண்ட விடாது. அது மட்டுமின்றி, மிகவும் சுத்தமான மற்றும் குளிர்ச்சியான காற்றைத் தரும்.

இதையும் படியுங்கள்:
பூச்சியினமா ஈசல்? உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் அற்புத பூச்சி!
Trees to grow at home

4. தென்னை: வீட்டில் நாம் பாத்திரங்கள் கழுவும் நீர் செல்லும் இடத்தில் நட வேண்டிய மரம் தென்னை. இதில் காய்க்கும் தேங்காய்கள் வீட்டின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், தேங்காயை சேர்த்து வைத்து நமக்குத் தேவையான எண்ணெயாகவும் ஆட்டி வைத்துக்கொள்ள முடியும். வாழையைப் போலவே மிகுந்த பயன்களைத் தரக்கூடியது தென்னை.

5. பப்பாளி: வீட்டின் வேலி ஓரங்களில் வைக்க வேண்டிய மரம் பப்பாளி. இதன் இலை, காய், பழம் மூன்றும் மருத்துவ குணங்கள் மிக்கவை. பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் பப்பாளி என்றால் அது மிகையாகாது. இந்த மரமும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டியது கட்டாயம்.

மரம் வளர்ப்போம்! மண் வளம் காப்போம்! தன்னிறைவு அடைவோம்.

இரவிசிவன்

logo
Kalki Online
kalkionline.com