தேனிச் செங்கரும்பு இனிப்போ இனிப்பு!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு உற்பத்தி செய்யப்பட்டாலும், தேனியில் உற்பத்தியாகும் செங்கரும்புக்கு மதிப்பு அதிகம்தான்.
Sugarcane
Sugarcane
Published on

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் செங்கரும்பு பொங்கல் பண்டிகைக் காலத்தில் மட்டுமே சாப்பிடக் கூடியதாக இருக்கிறது. தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று அந்த மூன்று நாட்களும் இந்த செங்கரும்பை நாம் விரும்பிச் சாப்பிடுகிறோம்.

பொங்கல் திருநாளின் போது, நாம் சுமார் மூன்று நாட்களுக்கு கரும்பைச் சாப்பிடுகிறோம். ஆனால், இந்தக் கரும்பு உற்பத்திக்கு விவசாயிகள் குறைந்தது பத்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. கரும்பு உற்பத்திக்கு விவசாயத்தில் சில நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.

  • கரும்பு உற்பத்திக்கு முன்பாக, ஒரு அரும்புடைய கரணைகளைக் கொண்டு நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.

  • 25 முதல் 35 நாட்களான இளங்கரணைகளை மரபு வழியில், 3 அரும்புகளுடைய கரணைகளை நேரடியாக நடுகின்றனர். இம்முறையில் பயிர் இறப்பு விகிதம் சற்றேக் குறைவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கரும்போ கரும்பு!
Sugarcane
  • நடவு வயலில் அகன்ற இடைவெளியான 5 x 2 அடி பாதுகாத்தலினால் 75 சதவிகிதம் விதை தேவையைக் குறைக்க முடிகிறது. அதாவது, ஏக்கருக்கு 16000, 3 அரும்புடைய கரணைகள் நடவு செய்யப்படுகின்றன. மரபு வழி இடைவெளி 1.5 x 2.5 அடி என்கிற அகன்ற இடைவெளி அமைப்பு பயிருக்கு எளிதான காற்று மற்றும் சூரிய ஒளி ஊடுறுவதலுக்கு வழிவகிக்கிறது. இதனால் சிறந்த மற்றும் ஆரோக்கியமான கரும்பு வளர்ச்சி ஏற்படுகிறது. மேலும் ஊடு சாகுபடி முறைகளும் எளிதாக செயல்பட முடிகிறது.

  • போதுமான ஈரத்தன்மையை வழங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் 40 சதவிகிதம் நீரை சேமிக்க முடிகிறது. ஒரு கிலோ கரும்பு உற்பத்திக்கு 2500 லிட்டர் நீரை பயிர்ச்செடி உட்கொள்கிறது.

  • இயற்கை முறை ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பை வலியுறுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 253.70 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு!
Sugarcane
  • மேலும், ஊடுபயிர் சாகுபடி முறைகளை வழக்கப்படுத்துகிறது. உருளைக்கிழங்கு, தட்டைப்பயிறு, சீமைக் கொத்தவரை, கொண்டைக்கடலை, நீர்முலாம் பழம், கத்திரிக்காய் போன்ற பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடுதல் பரிந்துரைக்கப்பட்டாலும், தேனியில் ஊடுபயிர்கள் பயிரிடுவதில்லை.

  • தேவையான இயற்கை உரம் போட்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம், களைகளை எடுப்பது, தோகைகளை உரித்துவிடுவது என இருந்தால் போதும். பத்து மாதங்களில் சுவையான இயற்கை செங்கரும்பு அறுவடைக்கு தயாராகிவிடுகிறது.

  • மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றும் போது, கரும்பின் நீளம் மற்றும் எடை அதிகமாகிறது. ஒரு செங்கரும்பு சராசரியாக 7 அடி முதல் 10 அடி வரை வளர்கின்றது. குறைந்தது ஒரு பயிருக்கு 20 முதல் 25 தூர்கள் மற்றும் ஒரு பயிருக்கு 9 முதல்10 கரும்புகளையும் பெற முடிகிறது.

இதையும் படியுங்கள்:
கரும்பு வாங்கும்போதும் உண்ணும்போதும் கவனிக்க வேண்டியவை!
Sugarcane

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு உற்பத்தி செய்யப்பட்டாலும், தேனியில் உற்பத்தியாகும் செங்கரும்புக்கு மதிப்பு அதிகம்தான். கரும்பு என்றாலே, தேனிக் கரும்புதான் என்று சொல்லும் அளவுக்கு, தேனியில் விளையும் கரும்பில் இனிப்பு சுவை அதிகமிருக்கும். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர், கூழையனூர், கோட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாறு நீர்ப்பாசனத்தின் மூலம் அவை நன்றாக விளைச்சல் அடைகிறது. இங்கு விளையும் கரும்பின் இனிப்புச் சுவைக்காக, வணிகர்கள் இங்கிருந்து கரும்பை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com