

வாத்துகளின் சிறகுகளில் இயற்கை எண்ணெய் படலம் இருப்பதால் நீர் ஊடுருவாமல், சிறகின் எடை அதிகரிக்காமல் நீந்தவும் பறக்கவும் உதவுகிறது. சிறகுகளை அடிக்கடி சுத்தம் செய்து எண்ணெயை மீண்டும் தடவுவதால் நீர்ப்புகா தன்மை தொடர்கிறது. இந்த அமைப்பு வாத்துகளை மழை, குளிர் நீர் ஆகியவற்றிலிருந்து காக்கிறது. சரியான பராமரிப்பால் வாத்துகள் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.
வாத்துகள் தண்ணீரில் நனையாமல் இருப்பதற்கான காரணங்கள்:
1. நாள் முழுவதும் தண்ணீரிலேயே நீந்தும் வாத்துக்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்து ஒரு முறை உடலை சிலிப்பினாலே தண்ணீர் முழுவதும் வெளியேறி உலர்ந்து விடும். இதற்கு வாத்தின் உடலமைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது.
2. வாத்துக்கள் வால்பகுதிக்கு அருகில் சிறப்பு சுரப்பியான 'ப்ரீன் பிளாண்ட்' என்ற சுரப்பி உள்ளது. இயற்கையான எண்ணையை சுரக்கும் வேலையை இது செய்கிறது.
3. தங்கள் அலகால் வாத்துகள் சுரப்பியிலிருந்து வரும் இந்த இயற்கையான எண்ணையை எடுத்து நன்றாக உடல் முழுவதும் உள்ள சிறகுகளில் தடவிக் கொள்கின்றன. இதனால் சிறகுகளின் மீது இந்த எண்ணெய் நீர்ப்புகாத (Water Proof) பாதுகாப்பு படலத்தை உருவாக்குவதாலும் வாத்துகள் நீரில் நனையாமல் இருக்கின்றன.
4. வாத்துகளின் சிறகுகள் ஒன்றோடொன்று நெருக்கமாக பின்னிப்பிணைந்த அமைப்பைக் கொண்டுள்ளன. இதனால் வாத்துகள் எவ்வளவு நேரம் தண்ணீரில் நீந்தினாலும் உள்ளே ஊடுருவ முடியாமல் தண்ணீர் வெளியேறி விடுகிறது.
5. இந்த அமைப்புதான் வாத்துக்களின் உடல் வெப்பத்தைப் பாதுகாக்கிறது. மேலும் சிறகுகளுக்குள் காற்றை தக்கவைப்பதோடு, தண்ணீரில் வாத்துகள் எளிதாக மிதக்கவும் உதவிபுரிகிறது. இதன் காரணமாக அவற்றால் குளிரால் பாதிக்கப்படாமல் குளிர்ந்த நீரிலும் நீந்த முடியும்.
6. தங்களுடைய சிறகுகளை வாத்துகள் அடிக்கடி சுத்தம் செய்வதோடு, இயற்கையாக சுரக்கும் எண்ணையை மீ்ண்டும் மீண்டும் தடவிக்கொள்கின்றன. இதனால் வாத்துகளின் சிறகுகளில் நீர்புகாமல் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. இதனால், சிறகுடைய வாத்துகள் சிறப்பாக செயல்படுகின்றன.
7. இயற்கை எண்ணெய் பாதுகாப்பின் மூலமாக சிறகுகளில் நீர்புகாமல் இருப்பதால் சிறகுகளின் எடை அதிகரிக்காமல் இருக்கிறது. சிறகில் நீர்புகுந்து நனைந்துவிட்டால் நீந்துவதும், பறப்பதும் வாத்தின் எடை அதிகரிப்பு காரணமாக சிரமமாகிவிடும். ஆகவே, இயற்கை எண்ணையே வாத்தின் பாதுகாப்பான வாழ்விற்கு இன்றியமையாததாக இருக்கிறது.
8. இயற்கை வழங்கிய இயற்கை எண்ணெய் அமைப்பின் காரணமாக வாத்துகளுக்கு மழையோ, தண்ணீரோ பெரிய பிரச்சினையில்லை. இந்த பாதுகாப்பு அமைப்பு வாத்துகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
அனைத்துண்ணிகளான வாத்துக்களை நன்கு பராமரித்தால் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும். அறிஞர் சார்லஸ் டார்வின் கருத்துப்படியும், தொல்பொருள் ஆய்வு சான்றுப்படியும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாத்து இனங்கள் இருந்ததாக அறியப்படுகிறது.
மனிதர்கள் பொதுவாக வாத்துகளின் முட்டைகளுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கிறார்கள். வாத்து தோன்றிய இடம் எகிப்து என கூறப்படுகிறது. பெண் வாத்துகளை விட ஆண் வாத்துகள் உயரம் அதிகமாக காணப்படுகின்றன. அருகிலும் தொலைவிலும் பொருட்களை ஒரே நேரத்தில் தெளிவாக பார்க்கும் வகையில் வாத்துகளின் கண்களின் வடிவம் அமையப்பெற்றுள்ளது. தலையின் இருபுறமும் கண்கள் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 340° கோணத்தில் சுற்றிலும் பார்க்க முடிகிறது. இதன் மூலம் தண்ணீரிலேயே இருக்கும் வாத்து நீரில் நனையாமல் இருப்பதன் அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ள முடிகிறது.
இயற்கை மற்றும் விலங்குகளின் விசித்திரமான பரிணாம ரகசியங்களை ஆழமாகப் புரிந்துகொள்வதன் மூலம், நமது சுற்றியுள்ள இயற்கையின் மீதான வியப்பும் அறிவியலின் மீதுள்ள ஆர்வமும் பன்மடங்கு அதிகரிக்கிறது.