

மழைக்காலம் முடிஞ்சதும் நம்ம வீட்டு லைட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஈசல்களும் பூச்சிகளும் திடீர்னு வலம் வரத் தொடங்குவது எதனால தெரியுமா? இதுக்கு பின்னாடி ஒரு ஆச்சரியமான அறிவியல் ரகசியம் ஒளிஞ்சிருக்கு. அந்த திடுக்கிடும் உண்மையை ரொம்ப சுவாரசியமாகத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
சாதாரணமா நம்ம தமிழ்நாட்டுல பருவமழை பெஞ்சு முடிஞ்சதும், சாயங்காலம் வீட்டுக்கு உள்ள, இல்ல வெளியே லைட்ட போட்டா போதும். எங்கிருந்துதான் வருதுன்னே தெரியாம நூற்றுக்கணக்கான பூச்சிகளும், ஈசலெல்லாம் வந்து லைட்டை சுத்தி ரவுண்டு அடிக்க ஆரம்பிச்சிடும்.
இதப்பார்க்கிறப்போ, "இவங்களுக்கு வேற வேலையே இல்லையா, ஏன் இதுங்க இப்படி சுத்துது?" அப்படின்னு நம்ம எல்லாருக்குமே தோணும்.
இத படிக்கிற நீங்களும் எதேச்சையா உங்க வீட்டுல இந்த பூச்சிகளை கவனிச்சிருப்பீங்க. ஆனா இதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய ஆச்சரியமான உண்மை ஒளிஞ்சிருக்கும்னு கண்டிப்பா யோசிச்சிருக்க மாட்டீங்க.
அதைப்பத்தி ரொம்ப சிம்பிளா, சாதாரணமா, சுவாரசியமா பார்ப்போம்.
இந்த பூச்சிகள் எல்லாம் மழை பெய்ஞ்ச உடனே எப்படி திடீர்னு இவ்வளவு அதிகமா ஒரே நேரத்துல வெளிய வருது?:
முதல் உண்மை என்னன்னா, இந்த பூச்சியெல்லாம் இப்பதான் புதுசா பொறந்தாங்கன்னு அர்த்தம் இல்ல.
இந்த பூச்சிங்க தங்களோட லைஃப்ல முக்கால்வாசி நேரத்த நமக்கு தெரியாம மண்ணுக்கு அடியிலயோ அல்லது குளங்கள், ஏரிகள், நெல் வயல் தண்ணிக்குள்ளயோ ‘புழுக்களாத்தான்’ ரகசியமா கழிச்சிருக்காங்க.
மழை பெய்யும்போது மண் நல்லா லூசாகி soft ஆகிடும். காத்துல ஈரப்பதம் அதிகமாகும். இது இந்த பூச்சிங்கள வெளிய வந்து தங்களோட இணையை தேடி இனப்பெருக்கம் செய்றதுக்கு ஏத்த ஒரு சூப்பரான சூழலை இயற்கையாவே உருவாக்குது.
அதனாலதான் கரையான், பறக்கும் எறும்புகள், அந்துப் பூச்சிகள், வண்டுகள், ஈக்கள் எல்லாம் ஒரே நேரத்துல மொத்தமா வெளிய வருது.
குறிப்பா, சில பூச்சிகள் தண்ணிக்குள்ள ஒரு வருஷத்துக்கும் மேல கஷ்டப்பட்டு வளர்ந்துட்டு, வெறும் சில மணிநேரம் பெரிய பூச்சியா வாழ்ந்து முட்டையிடுறதுக்காக மட்டும்தான் ‘ரெக்கை முளைச்சு’ வெளியவே வருது!.
சரி, இவங்க ஏன் லைட்டை பார்த்தா பைத்தியம் பிடிச்ச மாதிரி சுத்துறாங்க?:
ரொம்ப காலமா விஞ்ஞானிகள் கூட என்ன நெனச்சாங்கன்னா, பூச்சிகள் நிலா வெளிச்சத்தை ஒரு ‘காம்பஸ் (Compass) மாதிரி’ வச்சு வழி தேடுறப்ப, நம்ம வீட்டு ‘கரண்ட் லைட்டையும்’ நிலானு தப்பா நெனச்சு சுத்துதுன்னு நெனச்சாங்க.
ஆனா, 2024-ல ‘Nature Communications’ அப்படிங்கிற பெரிய இன்டர்நேஷனல் சயின்ஸ் புக்குல வெளியான ஒரு அதிரடி ஆராய்ச்சி அந்த பழைய ஐடியாவையே டோட்டலா மாத்திருச்சு.
உண்மையில பூச்சிகளுக்கு லைட் வெளிச்சம்னா ரொம்ப புடிக்கும்னு நாம நெனைக்கிறது தப்பு. அவங்க வெளிச்சத்த விரும்பி வரல, உண்மையென்னனா அந்த பூச்சியெல்லாம் திசை மாறி போகுது!.
பொதுவா பூச்சிகள் பறக்கும்போது இயற்கையாவே தங்களோட முதுகை எப்போவும் வானத்தோட வெளிச்சமான பகுதியை நோக்கி வச்சுக்கும். இதுக்கு பேருதான் 'வெளிச்சத்தை நோக்கி முதுகை திருப்புற இயற்கை குணம்' (Dorsal Light Response).
இப்படி செஞ்சாதான் அதுங்களால பூமி எதுன்னு தெரிஞ்சு ‘தடுமாறாம’ நேரா பறக்க முடியும். ஆனா, நாம வீட்டுல போடுற ‘எலக்ட்ரிக் லைட்கள்’ அந்த பூச்சிகள் நம்புற நேச்சுரல் சிஸ்டத்தையே தலைகீழா குழப்பிருது.
பூச்சிகள் லைட் பக்கத்துல வரும்போது முதுக அதுப்பக்கம் திருப்ப முயற்சி பண்ணி, அதுங்களோட ‘பாடி கன்ட்ரோலை’ இழந்து லைட்ட சுத்தி சுத்தி வந்து கடைசியா கீழ விழுந்துடுது.
இத பத்தி ‘Britannica மற்றும் ScienceABC’ வெப்சைட்லயும் மேலே சொன்ன 2024 ல வெளிவந்த தகவல வச்சு ரொம்ப பக்காவா, தெளிவா சொல்லியிருக்காங்க.
மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இதிலுள்ள முக்கியத்துவம்:
நைட் டைம்ல இத பார்க்க நமக்கு எரிச்சல் கிளம்பினாலும், பறவைகள், வௌவால்கள், தவளைகளுக்கு இந்த பூச்சிகள்தான் முக்கியமான பருவகால சாப்பாடு.
சோ, நம் இயற்கை உருவாக்கிய உணவு சங்கலிக்கு (Food chain) இந்த பூச்சிகள் ரொம்ப முக்கியம். இந்த பூச்சிகள் மட்டும் இல்லன்னா பல விலங்குகளுக்கு உலகத்துல உணவே கிடைக்காம போயிடும்.
அதனால, இனிமே உங்க வீட்டுல பூச்சி சுத்துனா, அத ஒரு தொந்தரவா நெனைக்காதீங்க. பாவம் நம்ம வீட்டு லைட் வெளிச்சம் அதை கன்ஃப்யூஸ் பண்ணிருச்சுன்னு புரிஞ்சுக்கோங்க!.
இயற்கையின் ரகசியங்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் புரிந்துகொள்வதன் மூலம், நமது சுற்றுப்புறச் சூழலை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டு சிறு உயிரினங்கள் மீதான எரிச்சலைத் தவிர்த்து அவற்றுடன் இயைந்து வாழும் பக்குவத்தைப் பெறலாம்.