

சமீப காலமா வர்ற புயல் எல்லாம் ஏன் நம்ம தமிழ்நாட்டை விட்டுட்டு ஆந்திரா, ஒடிசா பக்கம் போகுது? இதைப் பத்தி கொஞ்சம் சிம்பிளா, பேசிக்கா பார்க்கலாமா?
எனக்கும், இந்த வானிலை சம்பந்தமான அறிவியலுக்கும் ரொம்ப தூரம் மக்களே!. முன்னாடியெல்லாம் ‘புயல்னு’ சொன்ன எனக்கு தோன்ற ஒரே விஷயம் ‘அதனால மழை பெஞ்சா லீவு வருமா வராதா அவ்வளவுதான்’. சரி இப்பதான் வளர்ந்துட்டோமே, அதனால இந்த Nature Scientific Reports மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் IMD MAUSAM Journal போன்ற செம பக்காவான சயின்டிஃபிக் தளங்கள்ல வந்த ‘ரிசர்ச் பேப்பர்களைப்’ படிச்சுப் புயல பத்தி புரிஞ்சுக்கிட்டேன். சும்மா சோசியல் மீடியா வதந்திகளை நம்பாம, நிஜமான அறிவியல் மேட்டர்கள வச்சுத்தான் இதைப் பத்தி இப்போ பார்க்கப் போறோம்.
விஷயம் என்னன்னா, புயல் ஒன்னும் வேணும்னே நம்ம தமிழ்நாட்ட அவாய்ட் பண்ணல. அப்புறம் அதுக்குனு தனியா ரூட் மேப்லாம் கிடையாதுங்க. கடலோட வெப்பம், காத்தோட திசை, காற்றோட அழுத்தம் (Pressure) இதெல்லாம் வச்சுதான் புயல் எந்தப் பக்கம் போகணும்னு டிசைட் ஆகுது.
முன்னாடி சென்னை, கடலூர், நாகப்பட்டினம் பக்கம் வந்த புயல்கள், இப்போ ஏன் வடக்கு பக்கம் போகுதுன்னா, அதுக்கு முக்கியமான காரணம் 'மேல்மட்டக் காற்று' (Upper-level winds) தான். பூமியில இருந்து பல கிலோமீட்டர் உயரத்துல வீசுற இந்த பலமான காத்து, புயலை வடக்கு திசை நோக்கி தள்ளிட்டுப் போயிடுதுனு Nature Scientific Reports ஆய்விலேயே பக்காவா சொல்லியிருக்காங்க. பூமி சூடாயிட்டே வர்றதால இந்த காத்தோட திசையே மாறிடுது.
அடுத்த காரணம், கடலுக்கு அடியில இருக்கிற வெப்பம் (Ocean Heat Content). வெறும் கடல் மேல்மட்டம் மட்டும் இல்லாம, ஆழ்கடல்ல இருக்கிற சூடான நீர் லேயர்ஸ் (layers), இல்ல அடுக்குகள்தான் புயலுக்கு எனர்ஜி தருது. இதைப்பத்தி ScienceDirect தளத்துல இருக்கிற INCOIS / Dynamics of Atmospheres and Oceans கட்டுரைகள்ல ரொம்பத் தெளிவா விளக்கியிருக்காங்க. இந்த ஆழ்கடல் வெப்பமும், எல் நினோ (ENSO) போன்ற பெரிய காலநிலை மாற்றங்களும் சேர்ந்துதான் புயலோட பாதையை மாத்துது. இதனாலதான் வங்காள விரிகுடா புயல்கள் இப்போ ஆந்திரா, ஒடிசாவை அதிகம் குறிவைக்குது.
சரி, ஒரு சாதாரண மனுஷனா நம்மலால மழையைக் கணிக்கமுடியுமா?:
நம்ம ஊர் மீனவர்கள், விவசாயிகள்லாம் வானம், கடல், காத்தோட ஈரப்பதத்தை வச்சு ஈஸியா மழைய கணிப்பாங்க. கடல்ல இருந்து நல்ல குளுமையான, நிறைய ஈரப்பதம் இருக்குற காத்து (கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில இருந்து) வீசுனா மழை வர சான்ஸ் அதிகம். அதுவே மேற்குல இருந்து வர்ற காத்து வறண்ட காத்தா இருந்தா, அப்போ மழை வாய்ப்பு கம்மி. நம்ம தமிழ்நாட்டுக்குக் கிழக்குல வங்காள விரிகுடா (Bay of Bengal) கடல் இருக்குறதால, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில இருந்து வர்ற காத்து பல ஆயிரம் கிலோமீட்டர் கடலுக்கு மேல டிராவல் பண்ணி வரும்போது, கடல்ல இருக்குற அத்தனை நஈரப்பதத்தையும் அப்படியே அள்ளிக்கிட்டு நம்ம ஊருக்குள்ள வருது. இந்த ஈரப்பதம் நிறைந்த குளுமையான காத்து நிலப்பகுதிக்கு வந்ததும் மேகங்களா மாறி செம மழையைக் கொடுக்கும், இதத்தான் நாம வடகிழக்கு பருவமழைனு சொல்றோம்.
ஆனா, அக்டோபர் மற்றும் நவம்பர் மாசங்கள்ல காத்து மேற்கு திசையில இருந்து வீசுனா, நமக்கு மேற்கு பக்கம் கேரளா, கர்நாடகா நிலப்பகுதிகள் இருக்குறதால அது முழுக்க முழுக்க வெறும் தரைக்காத்தாதான் நம்ம ஊருக்கு வரும்.
இந்த மேற்கு காத்து கடலுக்கு மேல வராம வறண்ட நிலப்பகுதியைத் தாண்டி வர்றதால இதுல கொஞ்சகூட ஈரப்பதம் இருக்காது. அதனாலதான் இந்த டைம்ல மேற்கு காத்து வீசினா மழை வர்றதுக்கான சான்ஸ் ரொம்பவே கம்மியாயிடுதுங்க. ஆனா, ஆந்திராவுல புயல் கரை கடந்தாலும், அதோட மேகக் கூட்டங்கள் பெருசா இருந்தா சென்னைக்கும் செம மழை கிடைக்கும்!.
அதேபோல, நைட்டுல வழக்கத்தைவிட புழுக்கம் அதிகமா இருந்தா காத்துல ஈரப்பதம் அதிகமாகுதுனு அர்த்தம், மழையும் வரலாம். உலக வானிலை அமைப்போட WMO Tropical Cyclone Resources தளம் சொல்ற மாதிரி, இப்போதெல்லாம் சாட்டிலைட், ரேடார், அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் மாடல்கள் வச்சுதான் புயல் துல்லியமா எங்கே கரையை கடக்கும்னு கணிக்கிறாங்க.
அதனால சும்மா கடல்காற்றையும், ஈரப்பதத்தையும் மட்டும் வச்சு நாம உள்ளூர் மழையை ஓரளவுக்குக் கணிக்கலாமே தவிர, புயலோட கரெக்ட் ரூட்டை இப்ப வர்ற லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் மாடல்கள் இல்லாம வெறும் கண்களால் கண்டுபிடிக்கிறது கஷ்டம்தான்!
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், சமூக வலைதள வதந்திகளில் சிக்காமல், வானிலை மாற்றங்கள் மற்றும் புயல் இயக்கவியல் பற்றிய உண்மையான அறிவைப் பெற்று, இயற்கைப் பேரிடர்களை அறிவியல்பூர்வமாக எதிர்கொள்ளும் தெளிவைப் பெறுங்கள்.