

வெஜிடபிள் பிரியாணி
துரிதமாக வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
6 பேருக்குத் தேவையானவை:
2½ தம்ளர் அரிசி, உருளைக்கிழங்கு 200 கிராம், கேரட் பெரிது 5, பீன்ஸ் 100 கிராம் , காலி ஃப்ளவர்- 150 கிராம், புதினா 10 இலைகள், கொத்தமல்லி சிறிது.
முந்திரி 100 கிராம், ஆவின் பட்டர் நெய் 100 கிராம். காய்களை நீங்கள் விரும்பும் அளவிற்கு நறுக்கிவிடுங்கள்.
இப்போது நாம் குக்கரில்தான் நேரடியாக வெஜிடபிள் பிரியாணி செய்யப்போகிறோம்.
கேஸ் சிம்மில் இருக்கும்போது காலி குக்கரை (அடி தட்டு எல்லாம் வேண்டாம்) அடுப்பில் வைத்து பட்டரை உருக்குங்கள்.
நெய் சூடான உடன் தாளிக்க வேண்டிய சாமான்களைத் தாளியுங்கள். புதினா மற்றும் கொத்தமல்லி போடுங்கள். இப்போது 100 கிராம் முந்திரியைப் போட்டுக்கிளருங்கள்.
நல்ல சுவை வேண்டும் என்றால் நறுக்கிய காய்கறிகளை நெய்யில் சிறிது வதுக்குங்கள். ஒரு 5 நிமிடங்கள் கழித்து கழுவிய இரண்டரை தம்ளர் அரிசியைக் குக்கரில் போடுங்கள். ஒரு தம்ளர் அரிசிக்கு 3 தம்ளர் தண்ணீர் ஊற்றிவிடுங்கள்.
தண்ணீர் அதிகம் உற்றுவது காய்கறிகள் இருப்பதால். தண்ணீர் ஊற்றிய உடன் அரை ஸ்பூன் உப்பு போடுங்கள். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் தூவுங்கள். இப்போது குக்கரை மூடிவிட்டு கேஸ்சை
பெரிதுபடுத்துங்கள். 10 நிமிடத்தில் பிரஷர் வந்துவிடும். இன்னும் 5 நிமிடங்கள் குக்கர் கேஸ் அடுப்பில் இருக்கட்டும்.
பிறகு மெதுவாக குக்கரைத் திறக்கவும். காய்கறி மேலாக இருக்கும். அரிசி வெந்து கீழே இருக்கும். இப்போது நீங்கள் ஒரு கரண்டியால் பிரியாணியை நன்றாகக் கிளருங்கள். காய்கறிகளைக் கிளருங்கள்.
துரித வெஜிடபிள் பிரியாணி தயார் ஆகிவிட்டது.
சுவை தூக்கலாக இருக்கும்!
காராபூந்தி!
மாலை வேளைகளில் சிறுவர்கள் ருசியாகச் சாப்பிட விரும்புவார்கள். பெரியவர்களும் ஸ்நாக்ஸ் சாப்பிட பெரிதும் விரும்புவார்கள். எல்லாம் கடையிலிருந்து வாங்கி சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும்.
சரி… துரிதமாக வீட்டில் என்னசெய்யலாம். காரத்துடன் முறு முறு என்று இருக்க வேண்டும். அதற்குத்தான் காராபூந்தி.
6 பேருக்கு - இரண்டு நாளுக்கு வருமளவு காராபூந்தி செய்ய...
முதலில் கேன் தண்ணீரில் முக்கால் கிலோ கடலை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பிசையுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் நீர் ஊற்றிக்கொள்ளுங்கள். இதில் கால் கிலோ அரிசி மாவையும் போட்டு பிசையுங்கள்.
சிறிது காரத்திற்கு இரண்டு அல்லது மூன்று டீ ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து, பிறகு சிறிது ஒரு கரண்டியில் பாதி உப்பை போடுங்கள். எல்லாவற்றையும் நன்கு பிசையுங்கள். சிறிது அடர்த்தி உள்ள மாவாக இருக்க வேண்டும். நீர்போல் இருக்கக்கூடாது.
அச்சுக்குழல் வைத்து இருப்பீர்கள். அதில் முறுக்கு, அச்சு முறுக்கு, தேங்குழல், ஒட்டு பக்கோடா என எதை வேண்டுமானாலும் செய்யலாம். மாவை ஒரு சொட்டு வாயில் போட்டு காரம், உப்பு எல்லாம் சரியாக உள்ளதா என்று சோதித்து பாருங்கள்.
கேஸ் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் (நல்லெண்ணெய்) சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சுமார் ஒன்றரை லிட்டர் எண்ணெயை ஊற்றுங்கள். எண்ணெய் கொதிக்க சில நிமிடங்கள் ஆகும். அதற்குமுன் பூந்தி கரண்டி, மற்றும் மாவு குழல் எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது எண்ணெய் தயாராகிவிட்டது. குழலில் சிறிய வட்ட வடிவில் இருக்கும் அச்சை எடுத்து குழலில் போட்டு, குழலில் மாவை ஊற்றி வாணலியில் பிடியுங்கள். அச்சு குழலில் உள்ள அனைத்து மாவையும் ஊற்றி விட்டு பூந்தி கரண்டியால் பொறித்துகொண்டு இருக்கும் பூந்தி உருண்டைகளைச் சிறிது கரண்டியால் அக்கம் பக்கம் கிளறுங்கள்.
பூந்தி செந்நிறமாகா மாறும்போது கரண்டியால் எடுத்து எண்ணெய் வடிகட்டி மூலம் பாத்திரத்தில் போடுங்கள். இதே மாதிரி 5 அல்லது 6 ஏடுகள் எடுத்துவிட்டால் மாவும் தீரந்து போய் இருக்கும்.
இப்போது சூப்பர் காராபூந்தி ரெடி.
பக்கோட எல்லோரும் சாப்பிட்டு இருப்போம். ஆனால், காலிஃப்ளவர் பக்கோடா சுவை மிக்கது.
6 பேருக்கு.த் தேவையானவை:
முக்கால் கிலோ கடலைமாவு,,சிறிது அரிசி மாவு, கறிவேப்பிலை, 2 காலிஃப்ளவர்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு எடுத்துக்கொள்ளுங்கள். சிறிதுசிறிதாக நீர் கலந்து பிசையுங்கள். இப்போது அரிசிமாவு கால் பங்கு எடுத்து நீர் விட்டு பிசையுங்கள். நீர்போல் ஆகி விடக்கூடாது. நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். இப்போது நறுக்கிய வெங்காயம் போட்டு பிசையுங்கள். பிறகு காலிஃப்ளவர் நறுக்கியதை மாவில் போட்டு பிசையுங்கள். மாவு ரெடி.
கேஸ் அடுப்பில் வாணலி வைக்கவும். அதில் எண்ணெயை ஊற்றவும். நல்ல எண்ணெய் சிறப்பு. எண்ணெய் கொதி நிலை வந்ததா என்று சோதித்துப்பாருங்கள். சோதித்துப் பார்ப்பதற்கு ஒரு சொட்டு மாவை வாணலியில் விட்டு பாருங்கள். அது பொரிந்தது என்றால் பக்கோடா செய்ய ஆரம்பிக்கலாம்.
பிசைந்த மாவை வலது கையில் எடுத்து உருண்டைபோல வருகிறதா என்று பாருங்கள். முழு உருண்டையாக இருக்கக்கூடாது. மாவை எண்ணெயில் போடுங்கள். ஒரேசமயத்தில் 6 அல்லது 8 பக்கோடாவைப் பொரித்து விடுங்கள். காலிஃப்ளவர் உடன் மாவு சேர்ந்ததா எனப் பாருங்கள்.
பக்கோடா பிரவுன் கலர் வந்ததும் எண்ணெய் வடிகட்டி கரண்டியில் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடுங்கள். இப்படி முழு பக்கோடா ஆனதும் சிறிது கறிவேப்பிலை எடுத்து எண்ணெயில் பொரித்த பின் பக்கோடா மீது தூவுங்கள். சுவையான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி.