கிராமத்து ஞாபகம் வரும் அட்டகாசமான பனங்கிழங்கு பலகாரங்கள்!

ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த பனங்கிழங்கைக் கொண்டு செய்யும் 4 அருமையான உணவுகள்.
பனங்கிழங்கு
பனங்கிழங்குGemini image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

1. பனங்கிழங்கு புட்டு

தேவையான பொருட்கள்:

பனங்கிழங்கு – 3

சின்ன வெங்காயம் – 10

பச்சை மிளகாய் – 3

பூண்டு – 2 பல்

சீரகம் – கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை தோல் சீவிய பனங்கிழங்கில் தடவி வேகவிடவும். வெந்தவுடன் நாரை உரித்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உதிர்த்த கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் சீரகம், தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி சேர்த்துக் கிளறினால் சுவையான, சத்தான பனங்கிழங்கு புட்டு ரெடி.

2. பனங்கிழங்கு குருமா

தேவையான பொருட்கள்:

இளசான பனங்கிழங்கு 2

உருளைக்கிழங்கு 1

பெரிய வெங்காயம் 1

எலுமிச்சம்பழச்சாறு - கால் டீஸ்பூன்,

தக்காளி 1

மல்லித்தழை - சிறிது

விழுதாக அரைக்க:

பச்சை மிளகாய் 10

தேங்காய் 1 மூடி

பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் - 8 டீஸ்பூன்

மிளகு - கால் டீஸ்பூன்

சோம்பு -கால் டீஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - பொடித்தது 1 சிட்டிகை

செய்முறை:

பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து, தோல் உரித்து, நார் எடுத்து, பின் சிறு சதுரங்களாக (சுண்டைக்காய் அளவு) நறுக்கவும். விழுதாக அரைக்க வேண்டியவற்றை அரைத்தெடுக்கவும். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சுட வைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து, அதில் வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும் (அடுப்பை குறைந்த தணலில் வைத்துக்கொள்ளவும்).

அத்துடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து 10 நிமிடத்தில் பனங்கிழங்கை சேர்க்கவும். குருமா சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு மல்லித்தழை தூவி இறக்கி கால் டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறை ஊற்றி கலந்து பரிமாறவும்.

3. பனங்கிழங்கு ஜிலேபி

தேவையான பொருட்கள்:

பனங்கிழங்கு – 1 (வெள்ளை பகுதியை அரைத்து ½ கப்)

மைதா மாவு – 1 கப்

சோள மாவு– 2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா – சிறிதளவு

சர்க்கரை – 1 கப்

தண்ணீர் – ½ கப்

எலுமிச்சை சாறு – சில துளிகள்

நெய் – பொரிக்க

பனங்கிழங்கு
பனங்கிழங்குGemini image

செய்முறை:

மைதா, சோள மாவு, பேக்கிங் சோடா மற்றும் அரைத்த பனங்கிழங்கு சேர்த்து நன்கு கலக்கவும். இதை மூடி 6–8 மணி நேரம் புளிக்கவிடவும்.

சர்க்கரை, நீர் சேர்த்து பாகு செய்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
மாலை நேர டீக்கு என்ன ஸ்நாக்ஸ் பண்றதுனு கவலையா? குடைமிளகாய் இருந்தா இந்த 4 ரெசிபி ட்ரை பண்ணுங்க!
பனங்கிழங்கு

ஜிலேபி பாட்டிலில் மாவை நிரப்பி வளைய வடிவில் நெய்யில் ஊற்றி பொன்னிறமாக பொரிக்கவும். பொன்னிறமாக வந்ததும் பாகில் 1–2 நிமிடம் ஊறவைத்து எடுத்து வைக்கவும். சத்தான, சுவையான பனங்கிழங்கு ஜிலேபி ரெடி.

4. பனங்கிழங்கு லட்டு

தேவையான பொருட்கள்:

பனங்கிழங்கு (வேகவைத்தது) - 7

துருவிய தேங்காய் - 1/2 கப்

பனங்கற்கண்டு - 5 ஸ்பூன்

பொடித்த நட்ஸ் வகைகள் (பாதாம், முந்திரி) - 1/4 கப்

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

வேகவைத்த பனங்கிழங்குகளை எடுத்து அவற்றின் தோலையும் நடுப்பகுதியில் இருக்கும் குச்சி போன்றவற்றையும் நீக்க வேண்டும்.

பிறகு நார்களை உரித்தெடுக்க வேண்டும். இயன்றளவு நார்களை நீக்கிவிட வேண்டும்.

பிறகு பனங்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காலிஃப்ளவர் பிரியரா நீங்கள்? இந்த 4 சூப்பர் ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க!
பனங்கிழங்கு

பனங்கிழங்கு துண்டுகள், தேங்காய் துண்டுகள் இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். மிகவும் பேஸ்ட் போல் வரக்கூடாது.

ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவையை சேர்த்து, அதனுடன் பனஞ்சக்கரையும் பொடித்த பருப்பு வகைகளையும் சேர்த்து நன்றாக பிசையவும்.

கையில் சிறிது நெய் தடவி அக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். மேலே சிறிது பொடித்த பாதாம், முந்திரி தூவி பரிமாறவும். அல்டிமேட் சுவையில் பனங்கிழங்கு லட்டு தயார்.

கிராமத்து மணமும் ஆரோக்கியமும் நிறைந்த பனங்கிழங்கை வைத்து அசத்தலான 4 பலகாரங்களை எப்படிச் செய்வது என்பதை இந்தத் தொகுப்பு விளக்குகிறது.