ரவை கேசரி சலிச்சு போச்சா? வரகு, சாமை, பப்பாளியில் அசத்தல் 4 கேசரி ரெசிபி!

பாரம்பரிய சிறுதானியங்கள் மற்றும் பழங்களை வைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சுவையான கேசரி வகைகள்.
கேசரி ரெசிபி
கேசரி ரெசிபிGemini image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

1. கோதுமை ரவா கேசரி

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப் 

பொடித்த வெல்லம் - 1 கப் (250 மி.லி கப்)

தண்ணீர் - 4 கப்

முந்திரி பருப்பு, பாதாம்,  பிஸ்தா, திராட்சை - தேவையான அளவு

ஏலக்காய் தூள் - 1 தலா ஒரு ஸ்பூன் 

நெய் - தேவைக்கேற்ப 

செய்முறை:

பிரஷர் குக்கரில் நெய் மற்றும் கோதுமை ரவை சேர்க்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை சேர்த்து வறுக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும். அடுத்து நெய்யில், வேக வைத்த கோதுமையை ரவையை சேர்த்து அதில் வெல்ல பாகை வடிகட்டி ஒன்றாக கலக்கவும். பின்னர் நெய், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். சுவையான கோதுமை ரவா கேசரி தயார்.

2. பப்பாளி அவல் கேசரி

தேவையான பொருட்கள்:

பப்பாளி பழத்தின் கூழ் - 200 மிலி

அவல் - 100 கி

சர்க்கரை - 100கி

பாதாம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை - தேவையான அளவு 

நெய், ஏலக்காய் தூள், பச்சைக் கற்பூரம் - தேவைக்கேற்ப 

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 ஸ்பூன் நெய் விட்டு காய விடுங்கள். அதில் அவலை நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ரவையை போல அரைத்து தூளாக்கி கொள்ளுங்கள். பொடி மாதிரி இல்லாமல் ரவை போன்ற பதமாக இருந்தால்தான் கேசரி நன்றாக வரும்.

மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் அரைத்து வைத்துள்ள பப்பாளி கூழை நீர், சர்க்கரை கலந்து கிண்டி கொள்ளுங்கள். நல்ல பதமாக பப்பாளி கூழ் வரும்போது அதில் நெய் ஊற்றி அவலை சேர்த்து மூடி வைக்கவும்.

அடுப்பில் தீ 'சிம்'மில் இருக்க வேண்டும். நெய் உருகி அவல் கேசரியுடன் குழைந்த பதமாக வரும். இதனுடன் பச்சைக் கற்பூரம், வாசனைக்காக ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் கலந்தால், வித்தியாசமான சுவையில் பப்பாளி பழ அவல் கேசரி தயார். 

3. வரகரிசி கேசரி 

தேவையான பொருட்கள்:

வரகரிசி – அரை கப்

சர்க்கரை – அரை கப்

நெய் – 2 டீஸ்பூன்

முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை) – தலா 10

தண்ணீர் – 2 ½ கப் 

ஏலக்காய்த்தூள் – சிறிது

கேசரி பவுடர் – சிறிது

குங்குமப்பூ - சிறிது

தேங்காய்ப் பூ - 2  டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

இதையும் படியுங்கள்:
சர்க்கரை அளவை உயர்த்தாத 5 ஆரோக்கிய கோதுமை ரவை ரெசிபிகள்!
கேசரி ரெசிபி

செய்முறை:

வாணலியில் கொஞ்சம் நெய்யைச் சூடாக்கி, முந்திரி, கிஸ்மிஸ் வறுத்துக் கொள்ளவும். அதே நெய்யில் வரகரிசியை வறுத்து, ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இது ரவை பதத்திற்கு இருக்க வேண்டும்.

வாணலியில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அரைத்து வைத்துள்ள வரகை போட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்தவுடன் தேங்காய்ப் பூ, சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்துக் கிளறவும். இடை இடையே நெய் சேர்த்துக் கொள்ளவும்.

கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து இறக்கவும். சூப்பர் சுவையில் வரகரிசி கேசரி ரெடி.

4. சாமை அரிசி மாம்பழ கேசரி 

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி - 2 கப் 

பனை வெல்லம் - 1 கப் 

நெய் - 4 டீஸ்பூன் 

முந்திரி - தேவைக்கேற்ப

திராட்சை - தேவைக்கேற்ப

மாம்பழ துண்டுகள் - 1 கப் 

தண்ணீர் - 6 கப் 

கேசரி ரெசிபி
கேசரி ரெசிபிGemini image

செய்முறை:

முதலில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் முந்திரி, திராட்சையை நெய்யில் போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஒரே மாதிரியான கிச்சடியா? சுவை அதிகரிக்கும் 5 வித்தியாசமான ரெசிபி!
கேசரி ரெசிபி

பிறகு அடுப்பில் வாணலியை வைத்து, இரண்டு கப் சாமையை எடுத்து, அதில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்தபிறகு, அதனுடன் பனைவெல்லம் சேர்க்கவும். மேலும் அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை நெய்யுடன் சேர்த்து ஊற்றி நன்கு கிளறி விட்டபின் பாதியளவு மாம்பழ துண்டுகளை சேர்த்து நன்கு கிளறிவிட்டு சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

கடைசியாக கிளறிவிட்ட கலவையானது ஓரளவு  கெட்டியானதும் இறக்கி வைத்தபின் மீதி உள்ள மாம்பழ துண்டுகளை தூவி அலங்கரித்து பரிமாறினால் ருசியான சாமை மாம்பழ கேசரி தயார்.

வழக்கமான ரவை கேசரிக்கு மாற்றாக, உடலுக்கு நன்மை சேர்க்கும் சிறுதானியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சட்டென செய்யக்கூடிய 4 வகை கேசரி ரெசிபிகளை வீட்டில் சுலபமாக தயார் செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com