
1.சேமியா வெஜ் பிரியாணி
தேவையான பொருட்கள்.
மெலிதான சேமியா - 2 கப்
உடைத்த முந்திரி - பத்து
பெரிய வெங்காயம் -இரண்டு
பச்சை மிளகாய் - 4 ஏலக்காய்
லவங்கம் - 2
பிரியாணி இலை - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
தக்காளி பொடியாக கட் செய்தது -ஒன்று
புதினா இலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
கேரட் வேக வைத்தது -அரை கப் .
பீன்ஸ் வேக வைத்தது -அரை கப் .
பட்டாணி வேக வைத்தது - அரை கப் .
செய்முறை.
ஒரு வாணலியில் எண்ணெய், நெய்யும் ஊற்றி பட்டை, லவங்கம் ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது , மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில் வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி சேமியா சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு பங்கு கொதிக்கும் நீர் சேர்த்து கிளறவும். மூடி வேக வைக்கவும் அடிக்கடி கிளறிடவும். சேமியா வெந்தவுடன் வறுத்த முந்திரி கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து இறக்கவும். சுவையான வெஜ் சேமியா பிரியாணி ரெடி. சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.
2.லெமன் சேமியா.
தேவையான பொருட்கள்.
சேமியா - 2 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு -ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -ஒன்று கருவேப்பிலை -சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - மூணு ஸ்பூன் .
வரமிளகாய் -நாலு
உப்பு -தேவைக்கு
மஞ்சள் தூள் -ஒரு டீஸ்பூன்
தண்ணீர் - இரண்டு டம்ளர்
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு சேர்த்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு எலுமிச்சம்பழம் ஜூஸ் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்தபின் சேமியாவை போட்டு கிளறி தண்ணீர் வற்றும் வரை விடவும். பின் கிளறி இறக்கவும். சுவையான லெமன் சேமியா ரெடி.
3.சேமியா டெஸர்ட்
தேவையான பொருட்கள்.
சேமியா -ஒரு கப்
திக்கான பால் -ரெண்டு கப்
சர்க்கரை பவுடர் -அரை கப்
பாதாம் பருப்பு -ஆறு
டிரை செர்ரி - 4
டூட்டி புரூட்டி - 2 ஸ்பூன்.
சாக்லேட் சிப்ஸ் - 1 ஸ்பூன்.
நெய் - 1 ஸ்பூன்
கஸ்டர்டு பவுடர் - 2 ஸ்பூன்.
செய்முறை.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி சேமியாவை வறுக்கவும். பின் கால் கப் சர்க்கரை பவுடர் சேமியாவுடன் சேர்க்கவும். அதனுடன் ஒரு கப் பாலை சேர்க்கவும். சேமியாவை கிளறவும். சேமியா பாலுடன் கலந்து வெந்து சேர்ந்து வரும்போது அடுப்பை ஆஃப் பண்ணவும். பின் ஆறவிடவும்.
வேறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பால் சர்க்கரை கலந்து சூடு பண்ணவும். அதில் கஸ்டர்டு பவுடரை பாலில் கலந்து அந்த பாலுடன் சேர்க்கவும். பால் கிரீம் பதம் வந்தவுடன் அடுப்பை ஆஃப் பண்ணவும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் சேமியா பால் கலவையை ஒரு ஸ்பூன் போட்டு பின் கஸ்டர்ட் க்ரீமையும் அடுத்த லேயரில் போடவும். மீண்டும் சேமியா இனிப்பு கலவை சேர்த்து வைத்து அடுத்து க்ரீம் கலவை கலந்து மேலே நட்ஸ் டூட்டி ப்ரூட்டிதூவவும் .
அதன் மேல் சாக்லேட் சிப்ஸ் தூவி அலங்கரித்து ரெடி செய்தால் கூலானவுடன் சாப்பிடலாம். டெஸர்ட் சேமியா தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
4.தயிர் சேமியா.
தேவையான பொருட்கள்.
சேமியா -ரெண்டு கப்
தயிர் - ஒரு கப் பால் - அரைக்கப்
எண்ணெய் - மூணு ஸ்பூன்
கடுகு -ஒரு ஸ்பூன்
கடலைபருப்பு - 1 ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3
இஞ்சி சிறு துண்டு
முந்திரி பருப்பு - 10
உப்பு -தேவைக்கு
செய்முறை.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்த பின் சேமியாவை போட்டு இரண்டு நிமிடம் வேக வைத்து வடிகட்டவும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வடித்த சேமியாவில் தயிர், பால் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த சேமியாவில் வறுத்தவற்றை சேர்த்து கிளறி வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். சுவையான தயிர் சேமியா ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.