

தினமும் மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் என்று சாப்பிட்டு போர் அடித்து விட்டதா.. இதோ உங்களுக்காகத்தான் இந்த ஸ்பெஷல் ஊறுகாய் வகைகள்:
மஞ்சள் கிழங்கு ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
துருவிய மஞ்சள் கிழங்கு – 1 கப்,
வெந்தயம் – 1 ஸ்பூன்,
கல் உப்பு – கால் கப்,
நல்லெண்ணெய் – 1 கப்,
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்,
கடுகு – 3 ஸ்பூன்.
செய்முறை:
வெந்தயத்தை வறுத்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, துருவிய மஞ்சள் கிழங்கு சேர்த்து, மிதமான தீயில் சில நொடிகள் வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதக்கியதை வாய் அகன்ற பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் அரைத்து வைத்த வெந்தயப் பொடி, கல் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, சூடாக்கி கடுகு சேர்த்து நன்கு வெடிக்கவிட்டு, மஞ்சள் கலவையில் ஊற்றி, நன்றாகக் கிளறிவிடவும். மஞ்சள் ஊறுகாய் ரெடி. அதை ஓர் மண் ஜாடியில் போட்டு வைக்கவும். உடலுக்கு மிக நல்லது.
வாழைப்பூ ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – 1.5 டீஸ்பூன்
வெந்தயத்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
வாழைப்பூவின் பக்குவமான செவ்வந்தியை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும். சிறிது மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து, கொஞ்சம் நீரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த வாழைப்பூவை சேர்த்து மெதுவாக வதக்கவும்.
புளி சாறு, உப்பு, மிளகாய் தூள், வெந்தய தூள் சேர்த்து நன்கு கலவை கெட்டியாகும் வரை கிளறவும்.
இறக்கி குளிர்ந்ததும் பாட்டிலில் சேமிக்கவும். அற்புதமான சுவையில் வாழைப்பூ ஊறுகாய் தயார்.
பேரீச்சம் பழ ஊறுகாய்
தேவை:
பேரீச்சம் பழம் - 100 கிராம்,
எலுமிச்சம்பழம் - 1,
சிவப்பு மிளகாய் ஃபிளேக்ஸ் - தலா 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பேரிச்சம் பழத்தில் உள்ள விதையை எடுத்துவிட்டு சிறியதாக நறுக்கவும். அதில் சிவப்பு மிளகாய் ஃபிளேக்ஸ், உப்பு சேர்க்கவும் எலுமிச்சையை சாறாக்கிக் கலந்து பரிமாறவும். இரும்புச் சத்து மிக்க உணவு. எலும்பு வளர்ச்சி, நரம்பு உறுதி, மூளை வலிமைக்கு நல்லது.
பச்சை சுண்டைக்காய் ஊறுகாய்
தேவை:
பச்சை சுண்டைக்காய் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை