பாரம்பரியம் முதல் சாக்லேட் வரை: 4 அசத்தல் கொழுக்கட்டைகள்!

அவல் முதல் சாமை அரிசி வரை பலவித சுவைகளில் அசத்தலான கொழுக்கட்டை ரெசிபிகள்.
கொழுக்கட்டை
கொழுக்கட்டை Gemini image
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

1. மொறுமொறு அவல் காரக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

அவல் – 1 கப்

ரவை – ½ கப்

நிலக்கடலை – ¼ கப்

கேரட் – ½ கப்

பச்சைப் பட்டாணி – ¼ கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு – ½ தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

ரஸ்க் பொடி ½ கப்

மிளகுத்தூள்-½ ஸ்பூன்

செய்முறை:

அவலைக் கழுவி சிறிது நேரம் ஊறவைத்து வடிக்கவும். நிலக்கடலையை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கேரட், பட்டாணி சேர்த்து வதக்கவும். அவல், ரவை, உப்பு, நிலக்கடலைப் பொடி சேர்த்து கலந்து, சிறிது வெந்நீர் தெளித்து உருண்டைகளாகப் பிடிக்கவும். இட்லித் தட்டில் வைத்து 10–12 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். இறுதியில் மிளகுத்தூள் சேர்த்த ரஸ்க் பொடியில் உருட்டி சிறிது எலுமிச்சைச் சாறு தூவி பரிமாறினால் சுவை அசத்தும்!

2. ஓட்ஸ்–பாதாம் வெல்லக் கொழுக்கட்டை

ஓட்ஸின் நார்ச்சத்தும் பாதாமின் சத்துகளும் நிறைந்த இந்த கொழுக்கட்டை சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் மாவு - 1 கப்

பாதாம் - ¼ கப்

வெல்லம் - ½ கப்

தேங்காய் - ¼ கப்

எள் - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:

முதலில் பாதாம் மற்றும் ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் பாதாமை பொடியாக நறுக்கி, ஓட்ஸ், வெல்லம், தேங்காய், எள் மற்றும் ஏலக்காய்த்தூளுடன் சேர்த்து பூரணம் தயாரிக்கவும். ஓட்ஸ் மாவை வெந்நீரில் மென்மையாகப் பிசைந்து சிறு கிண்ணங்களாக்கி, பூரணத்தை நிரப்பி நன்றாக மூடவும்.

கொழுக்கட்டை
கொழுக்கட்டைGemini image

இட்லித் தட்டில் வைத்து 10–12 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். ஓட்ஸ் நார்ச்சத்து வழங்கி நிறைவுணர்வைத் தருகிறது; பாதாம் புரதம், நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின்களை வழங்குகிறது. பாரம்பரிய கொழுக்கட்டைக்கு ஆரோக்கியமான நவீன சுவையை இந்த வகை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
காய்கறிகளை தொடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடும்... சுவையான 2 ரெசிபிகள்!
கொழுக்கட்டை

3. சாக்லேட் ஓட்ஸ் கொழுக்கட்டை

சாக்லேட் சுவையுடன் ஆரோக்கியமான ஓட்ஸ் கொழுக்கட்டையை எளிதாகத் தயாரிக்கலாம்.

தேவையான பொருள்கள்:

ஓட்ஸ் மாவு - 1 கப்

கோகோ பவுடர் - 1 மேசைக்கரண்டி

தேங்காய் - ¼ கப்

சாக்லேட் துருவல் - ¼ கப்

வெல்லம் - ½ கப்

செய்முறை:

முதலில் தேங்காய், வெல்லம், சாக்லேட் துருவல் மற்றும் கோகோவை ஒன்றாகச் சேர்த்து பூரணம் தயாரிக்கவும்.

பின்னர் ஓட்ஸை வறுத்து எடுக்கவும். வறுத்த ஒட்ஸை மிக்சியில் போட்டு மாவாக்கவும். மாவை வெந்நீர் ஊற்றி மென்மையாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாகப் பிரித்து கிண்ணம் போல் செய்யவும். அதன் நடுவில் பூரணத்தை வைத்து நன்றாக மூடி, இட்லித் தட்டில் அடுக்கி 10–12 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். சுவையான சாக்லேட் ஓட்ஸ் கொழுக்கட்டை தயார். ஓட்ஸ் நார்ச்சத்து வழங்கி நீண்ட நேரம் நிறைவுணர்வைத் தருகிறது; கோகோ ஆன்ட்டிஆக்ஸிடன்ட்களையும் வழங்குகிறது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
உடலுக்குத் தெம்பு தரும் வெள்ளைச் சோளம்: பாரம்பரிய முறையில் 3 அருமையான ரெசிபிகள்!
கொழுக்கட்டை

4. சாமை அரிசி மிளகு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி – 1 கப்

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் – ½ கப்

உப்பு – தேவையான அளவு

நெய் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

சாமை அரிசியைச் சுத்தம் செய்து, சிறிது நேரம் ஊறவைத்து, வடித்து உலர்த்தி, மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் தண்ணீர், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதித்ததும் அரைத்த சாமை அரிசியைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி, கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

கை பொறுக்கும் சூட்டில் கலவையை எடுத்து, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10–12 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால், மணமணக்கும் சாமை அரிசி மிளகு கொழுக்கட்டை தயார்.

பாரம்பரிய ஆரோக்கிய தானியங்களுடன் நவீன சாக்லேட் சுவையும் இணைந்து, முழு குடும்பத்தையும் மகிழ்விக்கும் ஒரு அருமையான சமையல் பயணம்.