

சைவ பிரியாணியில் பல வெரைட்டிகள் இருந்தாலும் பன்னீர் டிக்கா பிரியாணி என்றாலே ஒரு தனி சுவைதான். சுவையான கமகமக்கும் பன்னீர் டிக்கா பிரியாணி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
1. பன்னீர் டிக்கா பிரியாணி
தேவையான பொருட்கள்:
கிராம்பு - 2
பட்டை - 1
ஏலக்காய் - 2
சோம்பு - தேவையான அளவு
அரிசி - 250 கிராம்
பன்னீர் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
தக்காளி - 2
புதினா - தேவையான அளவு
மல்லித்தழை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
தயிர் - தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய் தூள் - தேவையான அளவு
கரம் மசாலா - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பெரிய வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பன்னீர், புதினா, மல்லி, பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு தயிர், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.
அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து மிக்ஸ் செய்த வெஜிடபிள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் நாம் ஊறவைத்த அரிசியை வடிகட்டி தேவையான அளவு நீர் ஊற்றி 20 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் வேக வைக்க வேண்டும். சுவையான கமகமக்கும் பன்னீர் டிக்கா பிரியாணி தயார்.
2. கோவக்காய் பக்கோடா ரெசிபி
காய்கறிகளை குழந்தைகள் பெரிதும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இவ்வாறு புதுவிதமாக பக்கோடா போன்ற செய்து கொடுப்பதன் மூலம் அதனை விரும்பி உட்கொள்வார்கள். சுவையான மெறுமெறு கோவக்காய் பக்கோடா ரெசிபி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோவக்காய் - 150 கிராம்
கடலை மாவு - தேவையான அளவு
அரிசி மாவு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
சீரகம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கோவக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து நீல வாக்கில் ஆறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். கோவக்காய் உடன் தேவையான அளவு கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சீரகம் சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி நன்கு கலந்துகொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு சூடாகிய உடன் கோவக்காய் பொரித்து எடுக்கவும் சுவையான கமகமக்கும் கோவக்காய் பக்கோடா ரெசிபி தயார்.
இந்தக் கோவக்காய் பக்கோடா, மாலை நேர நொறுக்கு தீனி வகை மற்றும் டீயுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு ஒரு சிறந்த சைடு டிஷ் ஆக அமையும்.
மேலும் பக்கோடா போன்ற உணவு பொருட்களை கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும் இவ்வாறு வீட்டில் காய்கறிகளை பயன்படுத்தி செய்வதன் மூலம் மிகுந்த ஆரோக்கியம் உடையதாகவும் இதில் எந்தவித ஃபுட் கலரும் சேர்க்காமல் செய்வதால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.
வீட்டிலுள்ள சமையல் பொருட்களை வைத்து அசத்தலான சுவையில் இரண்டு விதமான ஆரோக்கிய ரெசிபிகளை ஒரே இடத்தில் கற்கும் அனுபவம்.