ஆப்பிரிக்கர்களின் ஆரோக்கிய ரகசியம் இந்த 5 தேங்காய் உணவுகளில் தான் ஒளிந்திருக்கிறது!

african-coconut-recipes
african-coconut-recipes
Published on

நமது ஊரைப் போலவே ஆப்பிரிக்க நாடுகளிலும் தேங்காய்க்கு ஒரு மிக முக்கியமான இடம் இருக்கிறது. காரசாரமான குழம்பு வகைகள் முதல் நாவில் எச்சில் ஊறவைக்கும் இனிப்புகள் வரை அனைத்திலும் தேங்காயின் ஆதிக்கம் அங்கு எப்போதுமே அதிகமாக இருக்கும். வெப்பமண்டலப் பகுதியான ஆப்பிரிக்காவில், இந்த தேங்காய் வைத்து அவர்கள் செய்யும் 5 விதமான சுவாரஸ்யமான உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. தேங்காய் சாதம்!

நமது ஊரில் தேங்காய் சாதம் செய்வது போல அங்கும் இது பிரபலம். ஆனால் அவர்கள் அரிசியுடன் நிறைய தேங்காய்ப்பால் சேர்த்து கிரீமியாக இதை சமைக்கிறார்கள். காரமான மசாலாக்களுடன் தேங்காய்ப்பாலின் அந்த மெல்லிய இனிப்புச் சுவை சேரும்போது அதன் ருசியே வேற லெவலில் இருக்கும். இதைச் சும்மா சாப்பிடாமல் பீன்ஸ் அல்லது ஏதாவது காய்கறி கூட்டுடன் சேர்த்து ஒரு முழுமையான உணவாக ஒரு கட்டுக் கட்டுகிறார்கள்.

2. காரசாரமான கோக்கனட் சூப்!

இது கொஞ்சம் வித்தியாசமான ஒரு சூப் வெரைட்டி. மிளகாய் மற்றும் இஞ்சியின் அதிரடியான காரத்தோடு தேங்காய்ப்பாலின் சாஃப்ட்டான சுவையையும் சேர்த்து இதைத் தயார் செய்கிறார்கள். இதனுடன் கொஞ்சம் வெண்டைக்காய் அல்லது ஏதேனும் ஒரு கீரை வகையையும் சேர்த்துக் கொள்வது அவர்களின் வழக்கம். ஒவ்வொரு ஊருக்கும் தகுந்தாற்போல இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மாறினாலும், இது உடலுக்கு ஒரு மாபெரும் எனர்ஜியைக் கொடுக்கும் ஒரு அருமையான உணவாகும்.

3. வாழைக்காய் தேங்காய் ஸ்டூ!

வாழைக்காயும் திக்கான தேங்காய்ப்பாலும் சேர்ந்தால் சுவை எப்படி இருக்கும் என சற்று கற்பனை செய்து பாருங்கள். இனிப்பான வாழைக்காய்களை நறுக்கி, தேங்காய்ப்பால் சாஸில் கொதிக்க வைத்து இந்த விசித்திரமான ஸ்டூவை செய்கிறார்கள். காரமும் இனிப்பும் கலந்த ஒரு சுவையைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சூப்பரான சாய்ஸ். இதை அப்படியே ஒரு பவுலில் ஊற்றிக் குடிக்கலாம் அல்லது சுடச்சுட சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
மாலை நேரத்து மயக்கம்: மொறுமொறு பக்கோடா முதல் நாவூறும் ரஸ்க் அல்வா வரை!
african-coconut-recipes

4. மொறுமொறு தேங்காய் பஜ்ஜி!

மாலை நேரங்களில் ஆப்பிரிக்கர்கள் விரும்பிச் சாப்பிடும் ஒரு அட்டகாசமான ஸ்நாக்ஸ் இது. நன்கு துருவிய தேங்காயுடன் கொஞ்சம் மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கிறார்கள். வெளியே கரகரப்பாகவும் உள்ளே சாஃப்ட்டாகவும் இருக்கும் இந்த தேங்காய் பஜ்ஜியை, சூடான டீ அல்லது காபியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அந்த நாளே ஸ்பெஷலாக மாறிவிடும்.

5. எனர்ஜி தரும் தேங்காய் பானம்!

அங்கு வெயில் கடுமையாக அடிக்கும் என்பதால், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த பானத்தை அடிக்கடி குடிக்கிறார்கள். பிரெஷ்ஷாகத் துருவிய தேங்காயைத் தண்ணீரில் கலந்து சர்க்கரை எதுவும் சேர்க்காமல் அதன் இயற்கையான இனிப்போடு அருந்துகிறார்கள். இது வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தையும் அத்தியாவசிய சத்துக்களையும் வாரி வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
தனது இன அழிவுக்கு தானே காரணமாகும் ஆப்பிரிக்க மழைப்பறவையின் விசித்திர வாழ்க்கை முறை!
african-coconut-recipes

ஆப்பிரிக்க மக்களின் இந்த வித்தியாசமான ரெசிபிகளைப் பார்க்கும்போது, ஒரு சாதாரண தேங்காயை வைத்து இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடியுமா என்ற பெரிய ஆச்சரியம் நமக்குக் கட்டாயம் வரும். அடுத்த முறை உங்கள் வீட்டில் தேங்காய் அதிகமாக இருந்தால், வழக்கமான உணவுகளைச் சமைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த ஆப்பிரிக்கன் ஸ்டைல் உணவுகளைத் தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com