ஈவினிங் ஸ்நாக்ஸ் முதல் ஸ்வீட் வரை.. பாசிப்பயறை வைத்து செய்யக்கூடிய 5 சூப்பர் டிஷ்கள் இதோ!

green-gram-recipes
green-gram-recipes
Updated on

நமது வீடுகளில் எப்போதும் ஸ்டாக்கில் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் தான் பாசிப்பயறு. இந்த நவீன காலத்தில் துரித உணவுகளைத் தேடி ஓடும் நாம், நமது முன்னோர்கள் காட்டித் தந்த இது போன்ற பருப்பு வகைகளை மறந்துவிட்டோம். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு எக்கச்சக்கமான புரதச்சத்தையும் அள்ளிக் கொடுக்கிறது. 

பொதுவாக இதை வைத்து பொங்கல் அல்லது சுண்டல் தான் அடிக்கடி செய்வோம். ஆனால் அதைத் தாண்டி இந்த சாதாரண பயறை வைத்து பலவிதமான சுவையான உணவுகளை ஈஸியாக சமைக்க முடியும். 

1. ஆரோக்கியமான கிச்சடி!

மதிய வேளையில் ஹெவியாக சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு இந்த கிச்சடி ஒரு பெரிய வரப்பிரசாதம். அரிசியையும் பாசிப்பயறையும் சரிசமமாக எடுத்து நன்றாகக் கழுவி வைத்துக்கொள்ளுங்கள். குக்கரில் கொஞ்சம் நெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கி, அதோடு இந்த அரிசி மற்றும் பயறைப் போட்டு குழைய வேகவைக்க வேண்டும். சூடான கிச்சடியை ஊறுகாயோடு சேர்த்துச் சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.

2. கச்சோரி!

மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட தோன்றினால் பாசிப்பயறு கச்சோரி ஒரு செம சாய்ஸ். நன்றாக ஊறிய பயறை லேசாக கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் மற்றும் மசாலாக்களைப் போட்டு ஒரு சூப்பரான ஸ்டஃபிங் ரெடி செய்து கொள்ளுங்கள். மைதா அல்லது கோதுமை மாவைச் சிறிய கிண்ணம் போலச் செய்து, அதற்குள் இந்த மசாலாவை வைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கச்சோரி தயார்.

3. தித்திக்கும் பாயசம்!

எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் பாயசம் இல்லாமல் அது முழுமையடையாது. அரைத்த பாசிப்பயறை அப்படியே நேரடியாகப் பாலில் கலந்து கட்டி விழாமல் மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். அது நன்றாக வெந்ததும் உங்கள் இனிப்புக்கு ஏற்ப சர்க்கரையோ அல்லது வெல்லமோ சேர்த்து, கடைசியாக ஏலக்காய்த் தூளைத் தூவி இறக்கினால் சுவை சும்மா அள்ளும். இது உடலுக்கு ஆரோக்கியமான ஒரு டெசர்ட் ஆகும்.

இதையும் படியுங்கள்:
உடல், உயிர், ஆன்மா... நெய் தேங்காய் உணர்த்தும் சரணாகதி தத்துவம் என்ன?
green-gram-recipes

4. நெய் மணக்கும் அல்வா!

வீட்டில் திடீரென ஏதாவது விசேஷம் என்றால் இந்த அல்வாவை சீக்கிரமாகச் செய்துவிடலாம். ஊறவைத்த பயறை நன்றாக பேஸ்ட் போல அரைத்து, தாராளமாக நெய் விட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதோடு காய்ச்சிய பால் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கிளறினால் அட்டகாசமான அல்வா ரெடியாகிவிடும். மேலே கொஞ்சம் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து கொட்டினால் இதன் ருசியை வாழ்நாளில் மறக்கவே மாட்டீர்கள்.

5. மொறுமொறு பக்கோடா!

திடீரென மழை பெய்யும் போது சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என நினைத்தால் இந்த பக்கோடாவை உடனே ட்ரை பண்ணலாம். ஊறவைத்து அரைத்த பயறு மாவில், கொஞ்சமாகச் சமையல் சோடா, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இதைச் சின்னச் சின்ன உருண்டைகளாகச் சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு வீடே மணக்கும் பக்கோடா ரெடி.

இதையும் படியுங்கள்:
செவ்வாய் கிரகத்தை டார்கெட் செய்யும் அமெரிக்கா.!
green-gram-recipes

எப்போதும் செய்யும் வழக்கமான உணவுகளைக் கொஞ்ச நாள் ஓரம்கட்டிவிட்டு, மேலே சொன்ன இந்த வித்தியாசமான ரெசிபிகளை உங்களின் வீட்டில் கட்டாயம் ட்ரை செய்து பாருங்கள். 

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com