நாவூறும் 5 வகை ரசங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரகசிய ரெசிப்பிகள்!

ஆப்பிள் முதல் வேப்பம்பூ வரை சளி, இருமலை விரட்டும் ஆரோக்கிய ரசங்கள்.
ரசங்கள் செய்முறை
ரசங்கள் செய்முறைAI image
Updated on

இஞ்சி லெமன் மற்றும் நார்த்தங்காய் ரசங்கள் செய்முறை விளக்கம்

1. இஞ்சி லெமன் ரசம் செய்ய தேவை:

தண்ணீர் – 2 கப்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

தக்காளி – 1

பூண்டு – 4 பல்

இஞ்சி – சிறிய துண்டு

மிளகு – 1/2 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கு

செய்முறை:

மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக நசுக்கவும். தண்ணீரில் தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் நசுக்கிய கலவையை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். இறுதியில் உப்பு சேர்த்து இறக்கவும். ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும். கமகமக்கும் இஞ்சி லெமன் ரசம் ரெடி.

2. நார்த்தங்காய் ரசம் செய்ய தேவை:

துவரம்பருப்பு - 1/4 கப்

தக்காளி - 1

மஞ்சள்தூள்‌ - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

நார்த்தங்காய்‌ சாறு - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்‌ - 1/4 டீஸ்பூன்

ரசப்பொடிக்கு:

தனியா - 3 டீஸ்பூன்

துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம்‌ - 1/2 டீஸ்பூன்

வர மிளகாய் - 4

தாளிக்க:

எண்ணெய்‌ - 1/4 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பொடிக்க வேண்டியவற்றை வறுக்காமல்‌ பொடித்து வைத்துக்‌ கொள்ளவும்‌. துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்‌. தக்காளியை துண்டுகளாக நறுக்கி ஒரு கப்‌ தண்ணீரில்‌ வேக வைக்கவும்‌. பிறகு வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து, உப்பையும்‌, பெருங்காயத் தூளையும்‌ சேர்த்து கொதி வந்ததும்‌, பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிடலாம். பின்னர் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்க வேண்டும். கடைசியாக நார்த்தங்காய்‌ சாற்றை ஊற்றி கலக்கி வைக்க வேண்டும். சுவையான நார்த்தங்காய் ரசம் ரெடி.

ஆரோக்கியம் தரும் ஆப்பிள் மற்றும் வேப்பம்பூ ரசங்கள் செய்முறை

3. ஆப்பிள் ரசம் செய்ய தேவை:

ஆப்பிள் – 1 (தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்)

தக்காளி – 1 (நன்றாக நசுக்கி வைக்கவும்)

புளி – சிறிய அளவு

மிளகு, சீரகம் – ½ டீஸ்பூன்

பூண்டு – 3 பல்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

கருவேப்பிலை – சில

கடுகு – ½ டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு இதமான 5 சூப்பர் லஸ்ஸி ரெசிபிகள்: வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்!
ரசங்கள் செய்முறை

செய்முறை:

மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து பொடியாக நசுக்கி வைக்கவும். புளி நீர், நசுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பின்னர் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வேகவிடவும். இறுதியில் நசுக்கிய மிளகு-சீரகம் கலவை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் கொதிக்கவிடவும். கடுகு, கருவேப்பிலை, நெய் தாளித்து ரசத்தில் சேர்த்து பரிமாறவும். வித்தியாசமான சுவையில் ஆப்பிள் ரசம் ரெடி.

ரசங்கள் செய்முறை
ரசங்கள் செய்முறைAI image

4. வேப்பம்பூ ரசம் செய்ய தேவை:

வேப்பம்பூ – 1 டீஸ்பூன்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

தக்காளி – 1 (நறுக்கியது)

பூண்டு – 5 பல் (அடித்து இடித்தது)

மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

கருவேப்பிலை – சிறிது

உப்பு – தேவைக்கு

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

செய்முறை:

முதலில் வேப்பம்பூவை சிறிது நல்லெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிப்புநீர், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ சேர்க்கவும். மேலும் 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். மேலே கடுகு தாளித்து சேர்த்து பரிமாறவும். சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி.

5. கருப்பு உளுந்து ரசம் செய்ய தேவை:

கருப்பு உளுந்து - 2 டீஸ்பூன்

தக்காளி – 1 (நறுக்கியது)

பூண்டு – 4 பற்கள்

மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன்

பெருங்காயம் – சிட்டிகை

மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது

கடுகு – 1/2 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி – சிறிய எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்தது)

இதையும் படியுங்கள்:
சமோசா நம்ம ஊரு உணவு இல்லையாம்.. இத்தனை வருஷமா நம்மள ஏமாத்திட்டாங்களே!
ரசங்கள் செய்முறை

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு கடுகு, பெருங்காயம், பூண்டு, கருவேப்பிலை தாளிக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசிக்கவும். மஞ்சள்தூள், மிளகு + சீரகம் பொடி சேர்க்கவும். புளிநீர், உப்பு, கருப்பு உளுந்து தூள் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அவிழ்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சத்தான கறுப்பு உளுந்து ரசம் ரெடி.

இந்த பிரத்யேக ரச வகைகளை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம், பருவகால சளி, இருமல் மற்றும் செரிமான கோளாறுகளிலிருந்து உங்கள் குடும்பத்தை இயற்கை முறையிலேயே பாதுகாக்க முடியும். சுவையோடு சேர்த்து உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலும் பலமடங்கு அதிகரிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com