வெயிலை விரட்டியடிக்க இதோ 5 சூப்பரான நுங்கு ரெசிபிகள்... உடனே ட்ரை பண்ணுங்க!

5 Nungu Recipes
5 Nungu Recipes
Published on

கோடைக்காலம் வந்துவிட்டாலே நமது உடலும் மனதும் ஏதேனும் குளிர்ச்சியான விஷயங்களை நோக்கியே ஓடத் தொடங்கும். வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசும் இந்த நேரத்தில், இயற்கை நமக்கு அளித்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம் தான் நுங்கு. ஆங்கிலத்தில் இதை 'ஐஸ் ஆப்பிள்' என்று மிக அழகாக அழைப்பார்கள். நமது ஊர்களில் மிகவும் சாதாரணமாகக் கிடைக்கும் இந்த நுங்கில், உடலின் சூட்டைத் தணிக்கும் அத்தனை மருத்துவ குணங்களும் கொட்டிக் கிடக்கின்றன. 

பொதுவாக நாம் நுங்கை அப்படியே தோலை உரித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால், இந்த நுங்கை வைத்து அட்டகாசமான, உடலைச் சில்லென்று மாற்றக்கூடிய பல பானங்களைத் தயாரிக்கலாம். அப்படி இந்த சம்மரை கூலாகக் கொண்டாட 5 சூப்பரான நுங்கு ரெசிபிகளைப் பார்ப்போம்.

குளு குளு நுங்கு ரெசிபிகள்!

1. நுங்கு நன்னாரி சர்பத்: கோடைகாலத்தில் நன்னாரி சர்பத் குடிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதனுடன் கொஞ்சம் நுங்கையும் சேர்த்துப் பாருங்கள், சுவை வேற லெவலில் இருக்கும். நுங்கை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கிளாஸில் நன்னாரி சர்பத், கொஞ்சம் எலுமிச்சைச் சாறு மற்றும் குளிர்ந்த நீரை ஊற்றி, அதில் நறுக்கிய நுங்குத் துண்டுகளைப் போட்டுக் குடித்தால் தொண்டைக்கு மிகவும் இதமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
எந்நாளும் பெண்களின் நலன் காக்கும் நுங்கு
5 Nungu Recipes

2. நுங்கு ரோஸ் மில்க்: குழந்தைகளுக்கு நுங்கை அப்படியே கொடுத்தால் சாப்பிட சற்று முரண்டு பிடிப்பார்கள். அவர்களுக்கு இந்த நுங்கு ரோஸ் மில்க் செய்து கொடுக்கலாம். காய்ச்சிக் குளிரவைத்த பாலில் ரோஸ் சிரப் கலந்து, அதில் ஒன்றிரண்டாக மசித்த நுங்கைப் போட்டுக் கொடுத்தால் ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காமல் குடித்துவிடுவார்கள்.

3. நுங்கு இளநீர் பாயசம்: இது ஒரு பிரீமியம் லெவல் டெசர்ட் என்று கூடச் சொல்லலாம். இளநீரில் வழுக்கையாக இருக்கும் தேங்காய் மற்றும் நுங்கு ஆகிய இரண்டையும் லேசாக அரைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் பால், இளநீர், சுவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை ஒன்றாகக் கலந்தால் அற்புதமான நுங்கு இளநீர் பாயசம் தயார்.

4. நுங்கு லெமனேட்: ரொம்பவும் சிம்பிளாக ஏதேனும் குடிக்க வேண்டும் என நினைத்தால் இதுதான் பெஸ்ட் சாய்ஸ். எலுமிச்சைச் சாறு, புதினா இலைகள் மற்றும் தேன் கலந்த ஜூஸில் பொடியாக நறுக்கிய நுங்கைச் சேர்த்துக் குடிப்பது உடலுக்கு உடனடி எனர்ஜியைக் கொடுக்கும்.

5. நுங்கு சப்ஜா கூலர்: சப்ஜா விதைகள் உடல் சூட்டைக் குறைக்க மிகவும் உதவும் என்பது நமக்குத் தெரியும். ஊறவைத்த சப்ஜா விதைகள் மற்றும் மசித்த நுங்கு இரண்டையும் குளிர்ந்த நீரில் கலந்து, லேசாக நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் வெயிலின் தாக்கம் சுத்தமாகத் தெரியாது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு!
5 Nungu Recipes

இந்த வெயில் காலத்தை மிகவும் புத்துணர்ச்சியோடு கடக்க இந்த 5 ரெசிபிகளும் உங்களுக்கு நிச்சயம் ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com