நாவில் நீர் ஊற வைக்கும் 5 காரசாரமான மிளகாய் ரெசிபிகள்… உடனே ட்ரை பண்ணுங்க!

green-chilli-recipes
green-chilli-recipes
Updated on

நம்ம ஊர் சமையல் என்றாலே காரமும் மணமும் தான். எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதில் ஒரு பச்சை மிளகாயோ அல்லது காய்ந்த மிளகாயோ சேர்க்கவில்லை என்றால் நமக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. பொதுவாக மிளகாயை ஒரு சுவையூட்டியாக மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த மிளகாயையே பிரதானமாக வைத்து பல அட்டகாசமான உணவுகளை நம்மால் சமைக்க முடியும். 

மழை பெய்யும் மாலை நேரமாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் கொண்டாடும் பார்ட்டியாக இருந்தாலும் சரி, காரசாரமான உணவுகள் எப்போதுமே ஒரு தனி உற்சாகத்தை கொடுக்கும். உங்கள் வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக்கூடிய 5 காரமான சைவ உணவுகளை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மொறுமொறுப்பான மிளகாய் பஜ்ஜி!

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே நம் மனது முதலில் தேடுவது சுடச்சுட ஒரு டீயும், காரமான மிளகாய் பஜ்ஜியையும்தான். பெரிதாக இருக்கும் பஜ்ஜி மிளகாயின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, அதில் சிறிதளவு புளி பேஸ்ட் அல்லது சாட் மசாலாவை தடவி, கடலை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்தால் அதன் சுவையே தனி லெவல் தான். மாலை நேர ஸ்நாக்ஸிற்கு இதைவிட ஒரு சிறந்தது இருக்க முடியாது.

2. நாவூறும் சில்லி பன்னீர்!

உங்களுக்கு சைனீஸ் உணவுகள் பிடிக்கும் என்றால் சில்லி பன்னீர் ஒரு அருமையான தேர்வாகும். சின்னச் சின்னதாக நறுக்கிய பன்னீர் துண்டுகளை சோள மாவில் புரட்டி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயம் மற்றும் சோயா சாஸ் சேர்த்து டாஸ் செய்தால் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் தயார். இது ஃப்ரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

3. ஹைதராபாத் ஸ்பெஷல் மிர்ச்சி கா சாலன்!

பிரியாணி பிரியர்களின் எவர்கிரீன் பேவரைட் இந்த மிர்ச்சி கா சாலன். பெரிய அளவிலான பச்சை மிளகாயை வறுத்து, வேர்க்கடலை, எள், தேங்காய் மற்றும் புளி கரைசல் சேர்த்த ஒரு ரிச்சான கிரேவியில் கொதிக்க வைத்து எடுப்பார்கள். மிளகாயின் காரமும், புளியின் புளிப்பும், வேர்க்கடலையின் மணமும் சேர்ந்து பிரியாணியின் சுவையை பல மடங்கு உயர்த்திவிடும்.

இதையும் படியுங்கள்:
ரத்த சோகையை ஓட ஓட விரட்ட இந்த 6 பச்சை உணவுகளை மட்டும் சாப்பிடுங்க!
green-chilli-recipes

4. காரசாரமான பச்சை மிளகாய் ஊறுகாய்!

வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்திலோ அல்லது வெறும் தயிர் சாதம் சாப்பிடும்போதோ இந்த பச்சை மிளகாய் ஊறுகாய் ஒரு ஆபத்பாந்தவனாக உதவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயுடன் எலுமிச்சை சாறு, கடுகு பொடி, வெந்தயப் பொடி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து கலந்தால் இன்ஸ்டன்ட் ஊறுகாய் ரெடி. இது நாக்கில் சுரீர் என்ற காரத்தை கொடுத்து சாப்பாட்டை இன்னும் கொஞ்சம் அதிகம் சாப்பிட தூண்டும்.

5. ஸ்பைசி சில்லி கோபி!

காலிஃப்ளவர் வைத்து செய்யப்படும் சில்லி கோபி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்டார்ட்டர் ஆகும். காய்ந்த மிளகாயை விழுதாக அரைத்து, பூண்டு மற்றும் வினிகர் சேர்த்து ஒரு ஸ்பைசியான சாஸ் தயார் செய்ய வேண்டும். அதில் வறுத்த காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி எடுத்தால், கல்யாண வீடுகளில் பரிமாறப்படுவது போன்ற சூப்பரான சில்லி கோபி கிடைத்துவிடும்.

இதையும் படியுங்கள்:
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்!
green-chilli-recipes

வார இறுதியில் உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது வீட்டிற்கு வரும் கெஸ்டுகளுக்கோ வித்தியாசமாக ஏதாவது சமைத்து கொடுக்க நினைத்தால், இந்த காரமான ரெசிபிகளை தாராளமாக முயற்சி செய்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com