

பாகற்காய் துவையல்:
தேவை:
பாகற்காய் – 1 கப் (நறுக்கியது)
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
வற மிளகாய் – 2
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, மிளகாய், பூண்டு வதக்கவும். பின்பு வெங்காயம், பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி ஆறவிடவும்.
எல்லாம் சூடு குறைந்ததும் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும். கடைசியாக கடுகு, கறிவேப்பிலை தாளித்து மேலே ஊற்ற, சுவையான பாகற்காய் துவையல் ரெடி.
பாகற்காய் சம்பல்
தேவை:
பாகற்காய் - அரை கிலோ
தக்காளி - 100 கிராம்
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக அரிந்து உதிர்த்து வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கி வைக்கவும்.
பாகற்காயைக் கழுவி நீளமாக இரண்டாக வெட்டி, மெல்லியதாக (அரைவட்டமாக) நறுக்கிவைக்கவும். நறுக்கிய பாகற்காயுடன், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கவும்.
பின்னர் பாகற்காயில் உள்ள நீரை வடித்துவிட்டு, வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, காயை சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பேப்பர் டவலில் பரவலாகப் போட்டு நன்கு எண்ணெயை வடியவிடவும்.
பிறகு தக்காளியை இலேசாக வதக்கிக்கொள்ளவும். பின்னர் பொரித்து வைத்த பாகற்காய், தக்காளி, பச்சை மிளகாய், பொpய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். கசப்பு இல்லாத சுவையான சம்பல் ரெடி.
பாகற்காய் ஸ்டஃப்
நீள பாகற்காய் – 1/4 கிலோ
கடலைமாவு – 1/2 கப்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
ரீபைண்ட் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயை முழுவதும் நறுக்காமல், விரல் நீளத்திற்கு குறுக்காக மூன்று துண்டுகளாகக் கீறி வைக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு சுளை புளி போட்டு அரை வேக்காடாக வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கடலைமாவை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொண்டு, அத்துடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி, ஒவ்வொரு பாகற்காய் துண்டுக்குள்ளும் நன்றாகத் திணித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஸ்டஃடு பாகற்காய்களைப் போட்டு சில நிமிடங்கள் மூடி வைத்து வெந்ததும், திருப்பிவிட்டு முறுகவிட்டு எடுக்கவும். அல்டிமேட் சுவையில் பாகற்காய் ஸ்டஃப் தயார்.