

சாக்லேட் பிரெட் புட்டிங்
தேவையான பொருட்கள்:
கோக்கோ பவுடர்-2டீஸ்பூன், வெண்ணெய் -2 டீஸ்பூன், ப்ரெட் ஸ்லைஸ் (சின்னதாக கட் பண்ணியது) -2கப்,பால்-1கப், சர்க்கரை -1/2கப், கிஸ்மிஸ்-1/2கப், வெனிலா எசென்ஸ் -2துளி, உப்பு -1சிட்டிகை.
செய்முறை:
சுடவைத்த பாலோடு ப்ரெட் ஸ்லைஸ் சேர்த்து ஊறவிடவும். ஊறி குளிர்ந்ததும் இதரபொருட்களை சேர்த்து வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றவும். அலுமினிய ஃபாயிலால் மூடவும். 45 நிமிடங்கள் வெயிட் போடாமல் பிரஷர் குக் செய்யவும். பின் குளிர விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
பிரெட் சாப்ஸ்
தேவையான பொருட்கள்:
பிரெட் -3ஸ்லைஸ், வெங்காயத்தாள்-1/4கப்,கேரட், கோஸ்1/2கப், கார்ன் ப்ளோர்-3டீஸ்பூன், மிளகாய் தூள் -2டீஸ்பூன், அஜினோமோட்டோ -சிறிது, உப்பு -தேவைக்கு.
செய்முறை:
பிரெட்டை மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தாள், கேரட், கோஸ் இவற்றை பொடியாக நறுக்கவும்.
கார்ன்ப்ளோரில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அதில் அஜினோமோட்டோ, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து இதில் பிரெட் துண்டுகளை போட்டு டிப் பண்ணி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
எண்ணையில் அரிந்த வெங்காயத்தாள், கேரட்,கோஸ் போட்டு வதக்கவும். இதில் மீதமிருக்கும் கார்ன்ப்ளோர் கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். கலவை கொதித்து வந்ததும் பிரெட் டை போட்டு நன்கு கலந்து இறக்கவும்.
ஆரஞ்சு ஸ்வீட் சான்ட்விச்
ஆரஞ்சு ஜுஸ்-1/2கப்,சிறிதாக வெட்டிய முந்திரி, திராட்சை, பாதாம், டூட்டிஃப்ரூட்டி-தலா-2டீஸ்பூன், பிரெட்-6, வெண்ணெய் -தேவைக்கு.
செய்முறை:
ஆரஞ்சு ஜுஸில் சிறிதாக வெட்டிய முந்திரி, திராட்சை, பாதாம், டூட்டி, ஃப்ரூட்டியை போட்டு ஊறவிடவும்.
பிரெட்டில் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்யவும். இதில் ஊற வைத்த டூட்டி ஃப்ரூட்டியை, பருப்புகளை தூவி பரிமாறவும்.
பிரெட் கேக்
பிரெட் -7துண்டுகள், நெய்யில் வறுத்த மைதா மாவு-100கிராம், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு 1/4கப், ஏலக்காய்த்தூள் -1சிட்டிகை, நெய்-100கிராம், சர்க்கரை -200கிராம்.
செய்முறை:
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாதாம், முந்திரியை ஊற வைத்து அரைத்து கொள்ளவும். சர்க்கரையை அடுப்பில் வைத்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும் மைதா மாவை சிறிது சிறிதாக போடவும். பிரெட் தூள், முந்திரி, பாதாம் விழுது, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக்கிளறி கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.