கத்தரிக்காய் பயன்படுத்தி பிரியாணியா? புதுசா இருக்கே!

Brinjal Biriyani
Brinjal Biriyani
Published on

பிரியாணி என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். சிக்கன், மட்டன் பிரியாணிகளைப் போல கத்தரிக்காய் பயன்படுத்தி செய்யப்படும் பிரியாணியும் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டது. காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த ஒன்றாக அமையும். இன்று நாம் இந்த அருமையான கத்தரிக்காய் பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி - 2 கப்

  • கத்தரிக்காய் - 4

  • வெங்காயம் - 2 

  • தக்காளி - 2 

  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

  • பச்சை மிளகாய் - 3 

  • புதினா - ஒரு கைப்பிடி

  • கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  • தனியா தூள் - 1 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி

  • தயிர் - 1/2 கப்

  • எண்ணெய் அல்லது நெய் - 3 தேக்கரண்டி

  • பட்டை - 1 துண்டு

  • லவங்கம் - 3

  • ஏலக்காய் - 2

  • பிரியாணி இலை - 1

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - 4 கப்

செய்முறை:

  1. முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.

  3. பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.

  6. மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

  7. நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

  8. புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறிய பின்னர், தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

  9. ஊற வைத்த அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரிசியை கடாயில் சேர்க்கவும்.

  10. அரிசியை மெதுவாக கிளறி விட்டதும் 4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.

  11. கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயை மூடி 15-20 நிமிடம் வேக விடவும்.

  12. தண்ணீர் முழுவதும் வற்றி அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

  13. 5 நிமிடம் கழித்து மெதுவாக கிளறினால் சூப்பரான சுவையில் கத்தரிக்காய் பிரியாணி தயார்.

இதையும் படியுங்கள்:
இப்படி ஒரு முறை கத்தரிக்காய் தொக்கு செஞ்சு பாருங்க! 
Brinjal Biriyani

இந்த கத்தரிக்காய் பிரியாணியை தயிர் வெங்காயம் அல்லது ஏதாவது ஒரு கிரேவியுடன் பரிமாறினால் சுவை இன்னும் கூடும். வார இறுதியில் வீட்டில் செய்து பார்க்க ஒரு அருமையான உணவு இது. செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
பலாக்காய் பிரியாணி - நாவூறும் சுவை!
Brinjal Biriyani

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com