

தேவையான பொருட்கள்:
1.சோனா மசூரி ரைஸ் 2 கப்
2.உளுத்தம் பருப்பு 1 கப்
3.அவல் ½ கப்
4.வெந்தயம் 1 டீஸ்பூன்
5.மைதா மாவு 2 டேபிள் ஸ்பூன்
6.நெய் - தோசை சுட தேவையான அளவு
7.உப்பு தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பருப்பு மற்றும் வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாகப் போட்டு தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். அவலை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு மிருதுவான, கெட்டி மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவு பொங்கி வரும் அளவுக்கு 10-12 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் அதனுடன் உப்பு மற்றும் மைதா மாவு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் ஒரு வார்ப்பிரும்பினாலான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து
ஊற்றவும். மாவை மெல்லிய தோசையாக பரத்தாமல் சிறிது தடிமனாகவே வைத்து, ஓரப்பகுதி முழுவதிலும் நெய் ஊற்றவும். தோசையை மூடி போட்டு மூடி, சிறு தீயில் வேகவிடவும். தோசையின் அடிப்பகுதி சாக்லேட் பிரவுன் நிறமாக மாறி, மேல் பகுதி ஆவியில் பஞ்சு போல வெந்திருக்கும். தோசையை எடுத்து தேங்காய் சட்னியுடன் சேர்த்து உட்கொள்ள செம்ம டேஸ்ட்டா இருக்கும்.
சுர்த்தி கோல்டு கோகோ (Surti Cold Coco) ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.கொழுப்பு நிறைந்த பால் 500 ml
2.இனிப்பு சேர்க்காத, உயர் தரமான கோகோ பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
3.மக்காச் சோள மாவு (cornflour) 1 டேபிள் ஸ்பூன்
4.சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன்
5.வெண்ணிலா எஸ்ஸன்ஸ் ½ டீஸ்பூன்
6.சீவி எடுத்த சாக்லேட் துண்டுகள் - அலங்கரிக்க தேவையான அளவு
செய்முறை:
கோகோ பவுடரையும் சோள மாவையும் கலந்து ¼ கப் குளிர்ந்த பால் சேர்த்து, கட்டி இல்லாமல் நீர்மக் குழம்பு (Slurry) போல் தயாரித்துக்கொள்ளவும். பின், அடி கனமான பாத்திரம் ஒன்றில் மீதமுள்ள பாலை ஊற்றி, சர்க்கரையையும் சேர்த்து கொதிக்கவிடவும். பின் தீயை குறைத்து விட்டு அதனுடன் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கோகோ-சோள மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டி விழாமல் கலந்துகொள்ளவும்.
அனைத்தும் ஒன்று சேர்ந்து, ஸ்பூனின் அடிப் பக்கத்தில் ஒட்டிக்கொள்ளும் பதம் வரும் பொழுது, அதாவது சுமார் 5-7 நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து, பின் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்துக் கலந்து, கீழே இறக்கி வைத்து ஆறவிடவும்.
ஆறிய பின் 4 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும். சரியான பதம் வருவதற்கு இது மிக அவசியம். பரிமாறுவதற்கு முன் தேவையான அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஐந்து செகண்ட்ஸ் அடித்து எடுக்கவும். இப்போது பானம் நன்கு நுரைத்து வந்திருக்கும். அதனுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து, மேற்பரப்பில் சாக்லேட் துண்டுகள் தூவி அருந்தவும். இந்த கோகோ சேர்த்த குளிர் பானமானது சூரத் நகரத்தில் மிகப் பிரபலமானது.