சுவையான கேரளா ஸ்பெஷல் சப்பாத்தி ரோல் மற்றும் பீட்ரூட் பச்சடி!

Kerala Chapati Roll
Chappathi -beetroot samayal
Published on

கேரளா சப்பாத்தி ரோல் என்பது சுவையான மற்றும் எளிதாக தயாரிக்கக்கூடிய உணவாகும். இதனை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். 

தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு – 1 கப்

உப்பு – தேவைக்கு

தண்ணீர் – தேவைக்கு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

பூரணத்திற்காக:

பன்னீர் – 250 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)

இஞ்சி பூண்டு விழுது – 1.5 டீஸ்பூன்

பச்சைமிளகாய் – 1 (நறுக்கியது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

மிளகாய்தூள் – ½ டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

கறிமசாலா – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

முட்டை – 3

உப்பு – சிறிதளவு

சாஸ் மற்றும் டாபிங்:

தக்காளி சாஸ் – தேவையான அளவு, வெங்காயம் – சிறிதாக நறுக்கியது, எலுமிச்சைசாறு – சிறிதளவு

செய்முறை: கோதுமை மாவில் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும். மாவை 15-20 நிமிடங்கள் ஓய்வில் வைக்கவும். சிறிய உருண்டைகளாக பிரித்து, சப்பாத்தியாக உருட்டி, தாவாவில் இருபுறமும் சுடவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி சேர்த்து மசியும் வரை சமைக்கவும். மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பன்னீர் துண்டுகளை சேர்த்து, வதக்கி  சிறிது நேரம் வேக விடவும்.

இதையும் படியுங்கள்:
வெரைட்டியான மகிழம்பூ புட்டு, பனங்கிழங்கு கார புட்டு செய்து ருசிப்போமா?
Kerala Chapati Roll

முட்டையை உடைத்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து வைக்கவும். தாவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, முட்டை கலவையை ஊற்றி, சப்பாத்தியை அதன் மீது வைத்து, இருபுறமும் சுடவும். சுட்ட சப்பாத்தியை ஒரு தட்டில் வைத்து அதன் மீது  தக்காளி சாஸ் பரப்பவும். பன்னீர் பூரணத்தை நடுவில் வைக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சைசாறு சேர்க்கவும். சப்பாத்தியை உருட்டி, ரோலாக மாற்றவும். மையத்திலிருந்து வெட்டி, பரிமாறவும்.

இந்த கேரளா சப்பாத்தி ரோல், காலை உணவு, மதிய உணவு அல்லது சிற்றுண்டியாக சிறந்த தேர்வாகும். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

கேரளத்து பீட்ரூட் பச்சடி  

இது பீட்ரூட், தயிர் மற்றும் சில நறுமணப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும். ஓண சாப்பாட்டில் இடம் பெறும் முக்கியமான ஒரு டிஷ்.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 1 (துருவியது)

தயிர் – 1 கப் (நன்கு அடித்தது)

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

கடுகு – ½ டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சில

காய்ந்தமிளகாய் – 1

உப்பு – தேவைக்கு

அரைக்க:

தேங்காய்துருவல் – ¼ கப்

பச்சைமிளகாய் – 1 அல்லது 2

இஞ்சி – சிறிய துண்டு

ஜீரகம் – ½ டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு கொட்டையை தூக்கி போடாதீங்க ப்ளீஸ்..!
Kerala Chapati Roll

செய்முறை: பீட்ரூட்டை துருவி  ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் சேர்த்து மென்மையாக மிதமான சூட்டில் வேக வைத்து கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் ஜீரகம் ஆகியவற்றை சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். வெந்த பீட்ரூட்டில் குளிர்ந்த பிறகு அரைத்த விழுது, தேவையான உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும். (தயிர் புளிக்காமல் இருந்தால் சுவையாக இருக்கும்.)

தாளிக்க: ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் தாளித்து பச்சடிக்கு மேலே ஊற்றவும்.

இப்பச்சடி அருமையான  சுவை மட்டுமல்ல, நிறமும் கண்களுக்கு ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com