

Chettinad Cabbage Kola:
செட்டிநாடு சமையல்னாலே அந்த மசாலா வாசனைக்கும், காரசாரமான சுவைக்கும் தனி மவுசுதான். அங்க ரொம்ப ஃபேமஸான ஒரு டிஷ் 'கோலா உருண்டை'. பொதுவா இதை மட்டன் வச்சு செய்வாங்க. ஆனா, அதே டேஸ்ட்டையும் மணத்தையும் நம்ம முட்டைக்கோஸ் வச்சு கொண்டு வந்தா எப்படி இருக்கும்?
முட்டைக்கோஸ் பிடிக்காத குழந்தைகளுக்கு கூட இப்படி செஞ்சு கொடுத்தா, அது கோஸ்ல செஞ்சதுன்னே தெரியாம தட்டுல ஒன்னு கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க. இந்த 'கேபேஜ் கோலா' எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 250 கிராம்
பொட்டுக்கடலை - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு சின்ன துண்டு
லவங்கம் - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
முதல்ல முட்டைக்கோஸை எவ்வளவு பொடியா நறுக்க முடியுமோ அவ்வளவு பொடியா நறுக்கிக்கோங்க. முட்டைக்கோஸ்ல தண்ணி சத்து அதிகமா இருக்கும். அதனால நறுக்கின கோஸை ஒரு துணியிலயோ இல்ல கையாலயோ நல்லா அழுத்திப் பிழிஞ்சு தண்ணியை முழுசா எடுத்துடுங்க.
தண்ணி இருந்தா உருண்டை பிடிக்க வராது, எண்ணெயில போட்டா பிரிஞ்சு போயிடும். அதனால தண்ணிய நல்லா பிழியறதுதான் இந்த ரெசிபியோட மெயின் சீக்ரெட்.
அடுத்ததா, ஒரு மிக்ஸி ஜார்ல பொட்டுக்கடலைய போட்டு நல்லா நைஸா பவுடர் பண்ணி எடுத்துக்கோங்க. இதுதான் நம்ம கோலா உருண்டைக்கு பைண்டிங் கொடுக்கும். இப்போ அதே மிக்ஸில சோம்பு, பட்டை, லவங்கம், பச்சை மிளகாய், துருவின தேங்காய் சேர்த்து தண்ணி ஊத்தாம கரகரப்பா அரைச்சு எடுத்துக்கோங்க.
இப்போ ஒரு பெரிய பவுல்ல தண்ணி பிழிஞ்சு வச்ச முட்டைக்கோஸ், நம்ம அரைச்ச மசாலா விழுது, பொட்டுக்கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, பொடியா நறுக்கின வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாத்தையும் ஒண்ணா சேருங்க. இதையெல்லாம் தண்ணி சொட்டு கூட ஊத்தாம நல்லா கெட்டியா பிசைஞ்சுக்கோங்க. கோஸ்ல இருக்கிற ஈரப்பதமே போதும்.
பிசைஞ்சு வச்ச மாவுல இருந்து ஒரு எலுமிச்சை பழ அளவு எடுத்து உருண்டைகளா பிடிச்சு வச்சுக்கோங்க. உருண்டைகள்ல விரிசல் இல்லாம மெதுவா உருட்டுங்க. உருண்டை ரொம்ப பெருசா இருந்தா உள்ள வேகாது, அதனால மீடியம் சைஸ்ல இருந்தா நல்லது.
அடுப்புல கடாயை வச்சு எண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க. எண்ணெய் நல்லா சூடானதும், அடுப்பை மிதமான தீயில வச்சுட்டு உருண்டைகளை மெதுவா எண்ணெயில போடுங்க. போட்ட உடனே கிளறாம, ஒரு நிமிஷம் கழிச்சு மெதுவா திருப்பி விடுங்க. எல்லா பக்கமும் நல்லா பொன்னிறமா, மொறுமொறுன்னு வந்ததும் எண்ணெயில இருந்து எடுத்துடுங்க.
வெளியில மொறுமொறுன்னு, உள்ள சாஃப்டா, செட்டிநாடு மசாலா வாசனையோட முட்டைக்கோஸ் கோலா உருண்டை தயார். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம் கூட தொட்டுக்க வச்சு சாப்பிட்டா சொர்க்கமா இருக்கும். ஈவினிங் ஸ்நாக்ஸா கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
முட்டைக்கோஸ்ல இப்படி ஒரு டேஸ்ட்டான டிஷ் செய்ய முடியும்னு யாருமே நம்ப மாட்டாங்க.