
இனிப்பு சீயம்
தேவை:
பச்சரிசி - 100 கிராம்
உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு - தலா 75 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
வெல்லம் - அரை கிலோ
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை;
பச்சரிசி உளுந்தம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, நைசாக, கெட்டியாக அரைக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து மசிக்கவும். வெல்லத்தை பாகு காய்ச்சி அதில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்க்கவும். வெந்த பாசிப்பருப்பில் நெய் சேர்த்துக் கிளறி, சுருள வதக்கி இறக்கி வைக்கவும். ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அரைத்த மாவில் முக்கி எடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
உப்பு சீயம்
தேவை:
பச்சரிசி - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - 75 கிராம்
சின்ன வெங்காயம் - 12 பச்சை மிளகாய் - 4 தேங்காய் துருவல் - அரை கப்
தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் அரைமணி நேரம் ஊறவைத்து, நைசாக, கெட்டியாக அரைத்து, கடுகு, உளுந்தம் பருப்பு தாளிக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடிப் பொடியாக நறுக்கி, அவற்றையும் உப்பு, தேங்காய் துருவலுடன், மாவில் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான உப்பு சீயம் தயார்.
அவல் உருண்டையும், மிளகு சீரக அவலும்
அவல் உருண்டை
தேவை:
கெட்டி அவல் - 1 கப்
நெய் - 3 ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
முந்திரிப் பருப்பு - பொடித்தது 6
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு அவலை சிவக்க வறுக்கவும். அதையும், சர்க்கரையையும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அவற்றோடு நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய்தூள் கலந்து, உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான அவல் உருண்டை தயார்.
மிளகு, சீரக அவல்
தேவை :
கெட்டி அவல் - 2 கப்
வறுத்து பொடித்த மிளகு சீரகப்பொடி - 3 ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு -1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா 1 சிட்டிகை
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
தாளிக்க கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் 2, கறிவேப்பிலை சிறிதளவு,
நல்லெண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை:
அவலைக் களைந்து, நீரை வடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, மூன்று கப் நீர் ஊற்றி, மிளகு, சீரகப் பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்து வரும்போது அவலைக் கொட்டி கிளறி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து, தேங்காய் துருவல் தூவி, கலக்கி இறக்கி வைக்கவும். சுவையான வித்தியாசமான மிளகு சீரக அவல் தயார்.