

1. தேங்காய் பாயாசம்
பாயாசம் என்றாலே அன்றாட ஜவ்வரிசி சேமியா பாயாசம், பால் பாயாசம், ரவை பாயாசம் இதுபோல்தான் செய்து சமைத்து வந்துள்ளோம். தேங்காயில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிறைந்துள்ளன. தேங்காய் அப்படியே சாப்பிடுவது விரைவில் வயிறு நிறைந்த உணர்வை தரும், இதனால் பசியை கட்டுப்படுத்தி உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.
மேலும் தேங்காய் சரும பளபளப்பிற்கும், கூந்தல் பளபளப்பிற்கும் பெரிதும் உதவுகிறது. தேங்காயில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கிறது. இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட தேங்காயை பயன்படுத்தி ஒரு புது விதமான சுவையில் செய்யக்கூடிய தேங்காய் பாயாசம் செய்வது எப்படிப் என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1
சர்க்கரை - 200 கிராம்
பசும்பால் - 300 கிராம்
பாதாம் பருப்பு - 20
முந்திரி - 10
உலர் திராட்சை - 5
பிஸ்தா - 10
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயை உடைத்து அதன் பின்புறம் இருக்கும் பிரவுன் கலர் பகுதியை நீக்கிவிட்டு நன்கு கழுவிய பின் துருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பசும்பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறி கொடுக்க வேண்டும்.
அது நன்கு கேரமல் ஆனவுடன் சிறிதளவு காய்ச்சிய பசும்பாலை ஊற்றி அதனுடைய பபுல் அடங்கியவுடன் பசும்பாலை அதனுடன் சேர்க்க வேண்டும். நன்கு அடி பிடிக்காதவாறு கிளறி கொடுக்க வேண்டும். இவை நன்கு சுண்டி வந்தவுடன் துருவி வைத்திருந்த தேங்காயை சேர்த்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும். இறுதியாக நெய்யில் வருத்தம் முந்திரி, பிஸ்தா, ஏலக்காய் தூள் சேர்த்து தேவையான அளவு நெய் ஊற்றி கிளறி கொடுக்க வேண்டும். சுவையான கமகமக்கும் தேங்காய் பாயாசம் தயார்.
2. பீட்ரூட் பாயசம்
வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலும் அதனை பெரும்பாலும் விரும்பி குழந்தைகள் சாப்பிடுவது கிடையாது. இவ்வாறு பாயாசம் போல் பீட்டர் செய்து கொடுத்தால் அதனை விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். உடலுக்கு பல ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பீட்ரூட் பாயாசம் செய்வது எப்படிப் என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 3
சவ்வரிசி - 50 கிராம்
பாதாம் பருப்பு - 20
முந்திரி - 30
பசும்பால் - 300 கிராம்
உலர் திராட்சை - 5
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
பீட்ரூட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துருவலில் சேர்த்து துருவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பாதாம் பருப்பை நன்கு ஊறவைத்து தோல் உரித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு பால் ஊற்றி நன்கு மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு நெய் ஊற்றி பீட்ரூட் துருவியதை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
இதனுடன் காய்ச்சி ஆறவைத்த பசும்பால் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் வேகவைக்க வேண்டும். பீட்ரூட் வெந்து வந்தவுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாதாம் பருப்பு பசும்பால் அரைத்ததை சேர்த்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும். இறுதியாக நெயில் வறுத்த முந்திரி உலர் திராட்சை, ஏலக்காய் பொடி தேவையான அளவு நெய் ஊற்றி மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும். சுவையான கமகமக்கும் உடல் ஆரோக்கியத்தை தரக்கூடிய பீட்ரூட் பாயாசம் தயார்.
குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இரண்டு அசத்தலான புதிய பாயாசம் செய்யும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.