குழந்தைகளுக்கு பீட்ரூட் பிடிப்பதில்லையா? இந்த 2 ஸ்வீட் செய்து கொடுங்க!

பசும்பால் அல்வா மற்றும் இயற்கை அகரகர் ஜெல்லி செய்யும் எளிய செய்முறை விளக்கம்.
பீட்ரூட் அல்வா
பீட்ரூட் அல்வாGemini image
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on

பீட்ரூட் என்றாலே அதில் அதிக அளவு உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும் பீட்ரூட்டை சமையலில் பயன்படுத்துவதைக் காட்டிலும் இவ்வாறு ஸ்வீட் செய்து கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அத்தியாவசியமானதாகவும் ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும்.

பீட்ரூட் அல்வா ரெசிபி

சாதாரணமாக அல்வா செய்வதைக் காட்டிலும் பீட்ரூட்டில் செய்வது ஒரு ஆரோக்கியமான புதுவிதமான சுவையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 250 கிராம்

பசும்பால் - அரை லிட்டர்

சர்க்கரை - தேவையான அளவு

முந்திரி - தேவையான அளவு

உலர் திராட்சை - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

ஏலக்காய் பொடி - தேவையான அளவு

செய்முறை:

பீட்ரூட்டை நன்கு அலசி அதனுடைய தோலை சீவிய பின் ஒரு துருவலில் சேர்த்து நன்கு துருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு சிவந்து வரும்படி பொறித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி துருவிய பீட்ரூட்டை சேர்த்து நன்கு கிளரி கொடுக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு நீர் ஊற்றி மூடி வைத்து நன்கு வேகவைக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு பசும்பால் சேர்த்து நன்கு கிளறி பத்து நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் வேக வைக்க வேண்டும். பீட்ரூட் நன்கு வெந்து வந்தவுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கிளரி கொடுக்கவேண்டும்.

பீட்ரூட்டும் பாலும் நன்கு வெந்து கெட்டியாக அல்வா பக்குவத்தில் வரும் பொழுது தேவையான அளவு ஏலக்காய் பொடி, வறுத்து வைத்திருந்து முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும்.

பீட்ரூட் அல்வா பாத்திரத்தின் ஒட்டாதவாறு இருப்பதே சரியான அல்வா பக்குவமாகும். சுவையான கம கமக்கும் குழந்தைகளுக்க ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பீட்ரூட் அல்வா வீட்டிலேயே தயார்.

பீட்ரூட் அல்வா
பீட்ரூட் அல்வாGemini image

பீட்ரூட் ஜெல்லி ரெசிபி

ஜெல்லி வகைகள் என்றாலே நாம் கடைகளில் தான் வாங்கி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் பீட்ரூட்டில் ஜெல்லி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
பாக்கெட் தேங்காய்ப்பால் உண்மையிலேயே பாதுகாப்பானதா? வீட்டுத் பாலுடன் ஒரு அதிரடி ஒப்பீடு!
பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - அரை கிலோ

அகரகர் - 50 கிராம்

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

பீட்ரூட்டை நன்கு கழுவி அதனுடைய தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி அகரகர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நரை முடியை விரட்ட ஒரு ஸ்பூன் போதும்! அசத்தல் சுவையில் கறிவேப்பிலை வெண்பொங்கல் செய்முறை!
பீட்ரூட் அல்வா

அகரகர் நன்கு கரைந்த உடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் நாம் வடிகட்டி வைத்திருந்த பீட்ரூட் ஜூஸையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவேண்டும். இவை நன்கு கொதித்த உடன் ஆறவைத்து ஒரு மோல்டில் சேர்த்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் காத்திருக்கவும். சுவையான உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பீட்ரூட் ஜெல்லி வீட்டிலேயே தயார்.

காய்கறிகளை தவிர்க்கும் குழந்தைகளுக்கு பீட்ரூட்டின் முழு சத்தையும் அல்வா மற்றும் ஜெல்லி வடிவில் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வழங்கும் கலையை கற்றுக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com