வீட்டிலேயே சுலபமாக செய்யப்படும் எக்லெஸ் பிளம் மற்றும் கப் கேக்!

45 நிமிடங்களில் குக்கரில் மென்மையான பிளம் கேக் தயாரிக்கும் எளிய வழிமுறை.
பிளம் கேக்
பிளம் கேக்AI image
Updated on

முட்டை, ஓவன் இல்லாமல் வீட்டிலேயே எக்லெஸ் பிளம் கேக் செய்வது பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. மைதா, பசும்பால், எண்ணெய், நாட்டு சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ், கீயூட்டி ஃப்ரூட்டி, உலர் திராட்சை, ஜெர்ரி, ஆப்பிள் ஜூஸ், முந்திரி சேர்த்து குக்கரில் 45 நிமிடங்கள் வேகவைத்து மென்மையான, ஆரோக்கியமான கேக் தயாரிக்கும் முறையை படிப்படியாக கூறுகிறது.

எக்லெஸ் பிளம் கேக் ரெசிபி

கேக் என்றாலே நாம் கடைகளில்தான் வாங்கி சாப்பிட்டுள்ளோம். இன்று வீட்டிலேயே எக்லெஸ் பிளம் கேக் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். நாம் வீட்டிலேயே செய்யும்போது அதில் எந்தவித கலரிங் ஏஜெண்டும் சேர்க்காமல் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா - முக்கால் கப்

பசும்பால் - அரை கப்

பேக்கிங் பவுடர் - தேவையான அளவு

எண்ணெய் - அரைக் கப்

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

வெண்ணிலா எசன்ஸ் - தேவையான அளவு

சர்க்கரை - தேவையான அளவு

கீயூட்டி ஃப்ரூட்டி - 20 கிராம்

உலர் திராட்சை - 20 கிராம்

ஜெர்ரி - 20 கிராம்

ஆப்பிள் ஜூஸ் - தேவையான அளவு

முந்திரிப் பருப்பு - 10 கிராம்

பிளம் கேக்
பிளம் கேக்AI image

கேரமல் சிரப் சேர்த்து மிருதுவான பிளம் கேக் செய்யும் முறை:

பாத்திரத்தில் தேவையான அளவு கீயூட்டி ஃப்ரூட்டி, உலர் திராட்சை, ஜெர்ரி சேர்த்து இரண்டு ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ் ஊற்றி பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

பின் மற்றொரு பாத்திரத்தில் அரை கப் பசும்பால், அரைக்கப் வாசனை இல்லாத எண்ணெய், முக்கால் கப் மைதா மாவு, சேர்த்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும். இதனுடன் பேக்கிங் பவுடர், நாட்டு சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அனைத்தையும் கலந்துகொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு சர்க்கரையை ஊற்றி நீர் சேர்க்காமல் நன்கு கேரமலைஸ் செய்து நாம் கலந்து வைத்திருந்த மைதா மாவு கலவையுடன் சேர்த்து ஆப்பிள் ஜூஸில் ஊறவைத்த உலர் திராட்சை அனைத்து கலவையும் சேர்த்து நன்கு மென்மையாக கலந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி இதன் மேலே சிறியதாக நறுக்கிய முந்திரி, உலர் திராட்சை சேர்த்து குக்கரின் அடியில் ஒரு ஸ்டாண்ட் வைத்து குக்கரில் வார் மற்றும் விசில் சேர்க்காமல் 45 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் வேகவைத்து எடுக்கவும்.

பின் இதனை 45 நிமிடங்கள் கழித்து எடுத்து ஒரு சின்ன கத்தியை கேக்கில் கட் செய்யும் போது மாவு ஒட்டாமல் வரவேண்டும் அதுவே கேக் தயாரானதற்கான பக்குவமாகும். சுவையான கமகமக்கும் எக்லெஸ் பிளம் கேக் வீட்டிலேயே தயார்.

2. சாக்லேட் கப் கேக் ரெசிபி

குழந்தைங்களுக்கு அதிகம் விருப்பமான குட்டி குட்டி கப் கேக் ரெசிபிஸ் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பசும்பால் - அரைக்கப்

மைதா - 1 கப்

பேக்கிங் சோடா - தேவையான அளவு

பேக்கிங் பவுடர் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

சர்க்கரை - தேவையான அளவு

எண்ணெய் - அரைக்கப்

கோக்கோ பவுடர் - அரை கப்

இதையும் படியுங்கள்:
நாவிற்கு விருந்தாகும் சேலம் தட்டுவடை செட்! ஆரோக்கியமான செய்முறை இதோ!
பிளம் கேக்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா, அரை கப் கோகோ பவுடர், தேவையான அளவு பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சர்க்கரை, அரை கப் வாசனை இல்லாத எண்ணெய், அரைக்கப் பசும்பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் நாம் கலந்து வைத்திருந்த மைதா கலவையும் சேர்த்து நன்கு கிளறிகொள்ள வேண்டும். இதனை 15 நிமிடங்கள் மென்மையாக கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

நன்கு கலந்த பின்பு இவற்றை பேப்பர் கப் மோல்டில் ஊற்றி மேலே சிறிதளவு சாக்லேட் துண்டுகளை போட்டு குக்கரில் கேஸ்கட் மட்டும் விசில் பகுதியை எடுத்துவிட்டு 30 முதல் 35 நிமிடங்கள் வரை மிதமான வெப்பத்தில் வேகவைத்து எடுக்கவும். கம கமக்கும் குழந்தைகளுக்கு பிடிக்கும் சுவையான சாக்லேட் கப் கேக் வீட்டிலேயே தயார்.

இதையும் படியுங்கள்:
பொட்டுக்கடலையில் இவ்வளவு சுவையான உணவுகளா? மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!
பிளம் கேக்

கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த தின்பண்டங்களுக்கு மாற்றாக, உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கும் விதமான சுத்தமான சுவையான கேக்குகளை குறைந்த செலவில் தயாரித்துக் கொடுக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com