
ஜாங்கிரி செய்த பின் அதன் மீது வண்ண தேங்காய் சீவலை அல்லது குங்குமப்பூ, அலுமினிய ஃபாயில் கொண்டு அலங்கரிக்க நன்றாக இருக்கும்.
ரவா உருண்டை செய்யும்போது சிறிதளவு பால் பவுடர், பொடித்த சர்க்கரை, டெஸிகேட்டட் கோகனட் முந்திரி, பாதாம் சீவல் விருப்பம் எனில் டூட்டிஃப்ரூட்டி ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து சூடான நெய் ஊற்றி உருண்டை பிடித்து பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுத்து வைக்க சுவை நன்றாக இருக்கும்.
பாதுஷா செய்து எண்ணையில் பொரிக்கும் முன் அங்கங்கே ஊசி கொண்டோ, முள் கரண்டி கொண்டோ துளையிட்டு, பின் ஆயில் ல் பொரித்து, சர்க்கரை பாகில் ஊறவிட்டு எடுத்து வைக்க ருசியாக இருக்கும்.
மைசூர் பாகு தேன்கூடுபோல வர, சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
குலோப் ஜாமூனுக்கு மாவு உருட்டும்போது நடுவில் கோவா, பாதாம் பிஸ்தா நறுக்கியதை வைத்து உருட்டி பொரித்து சிரப் ல் ஊறவிட்டு சுவைக்க ருசி அதிகரிக்கும்.
ஜவ்வரிசியை ஓர் சுத்தமான துணியில் முடிந்து காய்ச்சும் பாலில் போட்டுவிட அது கரைந்து பால் கெட்டியாகி காஃபி கலக்கும்போது சுவை அதிகரிக்கும்.
வழக்கமான ரவா, மைதா, அரிசியில் பட்சணங்கள் செய்வதற்கு மாற்றாக சிறுதானிய மாவு கொண்டு இனிப்பு, கார் பட்சணங்கள் செய்ய சுவையோடு, சத்தும் சேரும்.
தேங்காய் பால் சேர்த்து செய்யும் பலகாரங்கள் சுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்ய சுவையாக இருக்கும்.
அச்சு முறுக்கு செய்யும்போது கைப்பிடி அளவு பொட்டுக்கடலை மாவு சேர்த்துக்கொள்ள கரகரப்பாக சுவை நன்றாக இருக்கும்.
சுலைமாணி டீ எப்படி தயாரிப்பது என பார்ப்போம் வாங்க!
வித்தியாசமான அதேசமயம் ஆரோக்கியமான பானம் இந்த சுலைமணி டீ. கேரளா மலபார் பகுதிகளில் மிகவும் பிரபலமான தேநீர் இது. இந்த டீ அரபு பாரம்பரியத்திலிருந்து உருவானது என நம்பப்படுகிறது. இந்த டீயை மலபார் பகுதிகளில் மக்கள் பிரியாணி சாப்பிட்ட பிறகு குடிப்பர்.
இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளையும், குறைக்க வல்லது. அந்த டீயின் ரெசிபி இதோ இந்த பதிவில்.
தண்ணீர் -2கப், துருவிய இஞ்சி -1டீஸ்பூன், கிராம்பு-2, பட்டை-1/4இன்ச், ஏலக்காய்-2, சர்க்கரை -1டேபிள் ஸ்பூன், டீத்தூள்-1டீஸ்பூன், எ. சாறு-சிறிது.
கொதிக்கும் நீரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பின்பு அதில் டீ தூள் சேர்த்து கலந்து, நிறம் மாறும்வரை கொதிக்கவிடவும். பிறகு அதில் எலுமிச்சை சாறு பிழிந்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி வடிகட்டி அருந்தவும். சுவையான சுலைமாணி டீ நன்றாக இருக்கும்.
இதில் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக்கொள்ள சுவை அதிகரிக்கும்.