பழங்களை எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்? நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் இதோ!

தெரியாமல் செய்யும் தவறுகள் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கலாம்; சரியான முறையை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியமான பழங்கள்
ஆரோக்கியமான பழங்கள்AI image
Updated on

பொதுவாக எல்லா பழங்களும் ஆரோக்கியமானது தான். ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு குணங்கள் உண்டு. ஆனால், அவைகளை சாப்பிடும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொய்யாவில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல நன்மைகள் இருந்தாலும் இதை வெறும் வயிற்றில் (குறிப்பாக காலையில்), அதுவும் குளிர்காலத்தில் சாப்பிடாதீர்கள். மீறி சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும். அதுவே கோடை காலத்தில் வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிட்டால் அது உங்களுக்கு நன்மையையே தரும்.

புளிப்பு சுவை நிறைந்த தக்காளியை குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். ஆனால் கோடை காலத்தில் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா? காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றில் எரிச்சல் உண்டாகும்.

வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பழங்கள் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை

குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் ஆப்பிள் பழம் சாப்பிடால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். காலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் முதல் வேளையாக ஆப்பிள் பழம் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இந்தப் பிரச்னையை நிச்சியம் சந்திப்பீர்கள். கோடை காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை.

பல பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆனால் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது எடை இழப்புக்கு பயனளிக்கும். ஆப்பிள்கள், பெர்ரி மற்றும் முலாம்பழம் உட்பட சில பழங்கள் முழுமை உணர்வுகளை அதிகரிக்க உதவும். விரைவான எடை இழப்புக்கு உதவும் பழங்கள் திராட்சை, பப்பாளி, தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், அவகோடா, கிவி, ராஸ்பெர்ரி.

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணிக்கு அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் அதன் நன்மைகள் நமக்குக் கிடைக்காது.

வாழைப்பழமும், பாலும் குளுர்ச்சியான உணவு. இவை இரண்டையும் ஒன்றாகக் கலக்கும்போது அவை ஜீரண செயல்பாட்டையே குளறுபடி செய்கின்றன. குறிப்பாக சைனஸ் பிரச்னை, சுவாசப் பிரச்னை கொண்டோருக்கு இந்த கலவை உணவை பரிந்துரைப்பது மிக மிகத்தவறு என்கின்றனர். அதேபோல் கர்ப்பிணிகளும் பாலும் சேர்த்து சாப்பிட கூடாது.

ஆரோக்கியமான பழங்கள்
ஆரோக்கியமான பழங்கள்AI image

ஆரோக்கியமான பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா?

எந்த பழத்தை சாப்பிட்டு நீர் அருந்தக்கூடாது? அதிகளவில் சத்துக்களைக் கொண்ட மாதுளையை சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தினால், அமிலத்தன்மை, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படுமாம். வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்ட சிட்ரஸ் வகையான பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது.

ஏனெனில் உடலில் பிஹெச் அளவு வெகுவாகக் குறைவதுடன், செரிமான பிரச்னையையும் ஏற்படுத்துகின்றது. இதேபோன்று நாவல் பழத்தினை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படும்.

பெரும்பாலான பழங்களை நாம் ஃப்ரிட்ஜில் வைத்தே சாப்பிடுகிறோம். ஆனால், வாழைப்பழத்தை நாம் அப்படி ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஃப்ரிட்ஜில் வைத்து வாழைப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள மாவுச்சத்து ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் (resistant starch) ஆக மாறிவிடுகிறது. அதனை நாம் சாப்பிடும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.

மாதுளையை சரியாகச் சேமிப்பது எப்படி? மாதுளையின் முழுமையான சுவை, ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சியைப் பாதுகாக்க, அதை குளிர்ந்த, உலர்ந்த மற்றும் நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமிக்க வேண்டும். சாதாரண அறை வெப்பநிலையில் சேமிக்கும்போது மாதுளைகள் பல நாட்கள் புதிதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மாலை நேர பசிக்கு 5 ஆரோக்கிய கட்லெட் ரெசிபிகள்!
ஆரோக்கியமான பழங்கள்

அன்னாசிப்பழத்தில் புரோமலின் என்ற நொதி உள்ளது. இது சிலருக்கு வாய் புண்கள் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். மேலும், இது அமிலத்தன்மை கொண்டது. எனவே, நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும்.

ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிக ஆரோக்கியம் அளித்தாலும் இரவு நேரத்தில் வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துமாம்.

ஆதலால் இரவு நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருந்தாலும் இரவு நேரத்தில் இதனை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

அதிகமான ஊட்டச்சத்தைக் கொண்ட சப்போட்டா பழம் உடல் சோர்வை நீக்கி, கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இரவில் இதனை சாப்பிட்டால் தூக்கம் பாதிக்கப்படும். ஏனெனில் இதில் சர்க்கரை மற்றும் ஆற்றலின் அளவை அதிகரிப்பதே காரணமாகும்.

இதையும் படியுங்கள்:
சாதம், டால் மீந்துவிட்டதா? தூக்கிப் போடாதீங்க! இந்த 'மேஜிக்' ரெசிபிக்களை ட்ரை பண்ணுங்க!
ஆரோக்கியமான பழங்கள்

நாவல் பழம் குளிர்ச்சியான பழமாகும். இது இருமல் மற்றும் சளியை அதிகரிக்கிறது. ஏற்கனவே இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் நாவல் பழங்களை சாப்பிடக்கூடாது. இதை சாப்பிடுவது உங்கள் பிரச்னைகளை மோசமாக்கும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பழங்களில் உள்ள சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்பட்டு, செரிமானக் கோளாறுகள் நீங்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆற்றலும் இயற்கையான முறையில் பல மடங்கு அதிகரிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com