சாதம், டால் மீந்துவிட்டதா? தூக்கிப் போடாதீங்க! இந்த 'மேஜிக்' ரெசிபிக்களை ட்ரை பண்ணுங்க!

சாதம், டால் மீந்துவிட்டதா? தூக்கிப் போடாதீங்க! இந்த 'மேஜிக்' ரெசிபிக்களை ட்ரை பண்ணுங்க!
மீதமான உணவு
மீதமான உணவுAI image
Updated on

மீதமான உணவு வீணாவதை தடுக்க எளிய டிப்ஸ்!

பொதுவாகவே, எல்லோருடைய வீட்டிலும் சில சமயங்களில் மதியம் வைக்கும் சாதம் அதிகமாகவே மீந்துவிடும். மறுபடியும் அதை வைத்து ராத்திரிக்கு என்ன செய்வது என்று மிகவும் குழப்பமாகவே இருக்கும். வீட்டில் உள்ளவர்களும் இரவும் சாதம் சாப்பிட மாட்டேன் என்றும் கூறுவார்கள். அப்படியே சாப்பிட்டாலும் மறுபடியும் அதற்கு சாம்பார், பொரியல் அல்லது அதை வைத்து கலந்த சாதம் என்று ஏதாவது ஒன்று பண்ணவேண்டும். இனிமேல் சாதம் மீந்து வைத்தால் இந்த தோசையை முயற்சி செய்து பாருங்கள் மிக அருமையாக இருக்கும் சுவையாகவும் இருக்கும்.

மீதமான உணவு கொண்டு சத்தான தோசை செய்வது எப்படி?

முதலில் ஒரு கப் சாதத்திற்கு, ½ கப் உளுந்தை அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் 11/2 கப் அளவிற்கு ரவையை தண்ணீர் ஊற்றி பிசிறி வைக்கவும்.

அரைமணி நேரம் ஆனவுடன், முதலில் மீந்து போன சாதத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு உளுந்தையும் அரைத்துக்கொள்ளவும். கடைசியாக பிசிறி வைத்துள்ள‌ ரவையை போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்துக் கொள்ளவும்.

இப்போது இவை எல்லாவற்றையும ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பை போட்டு தோசை மாவு பதத்திற்கு தண்ணீரை ஊற்றி கலந்து வைக்கவும். மதியம் சாப்பிட்ட உடனேயே இந்த மாவை தயார் செய்து வைத்து விடலாம். எந்த அரிசி சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. புழுங்கலரிசி சாதமாக இருந்தால் சுவை சற்று கூடுதலாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மாலை நேர பசிக்கு 5 ஆரோக்கிய கட்லெட் ரெசிபிகள்!
மீதமான உணவு

இரவு டின்னர் சாப்பிட உட்காருவதற்கு முன்னால் சுடச்சுட வார்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். ஒருவேளை தோசை சுடும் போது உடைந்து போனால் மேலோட்டமாக சிறிது ரவையை கலந்து கொள்ளுங்கள். இதற்கு ஏதாவது ஒரு சட்னி இருந்தாலே போதும்.

மீதமான உணவு மூலம் ருசியான டால் பரோட்டா செய்முறை:

உங்கள் வீட்டிலுள்ளவர்களின் தேவைக்கேற்ப கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். 250g மாவிற்கு மூன்று பெரிய ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு மற்றும் ஒரு கப் டாலையும் உப்பையும் சேர்த்து பிசைய வேண்டும். டாலை ஒரேடியாக ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைய வேண்டும். பரோட்டா செய்யும் பதத்திற்கு வந்தவுடன் டாலை மேற்கொண்டு ஊற்றக் கூடாது. அதிகமாகி விட்டால் பரோட்டா இடுவதில் சிரமமாக இருக்கும்.

மீதமான உணவு
மீதமான உணவுAI image

பிறகென்ன? சாப்பிடும்போது சப்பாத்தியை இட்டு தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நனறாக வெந்த பிறகு எண்ணெய் அல்லது நெய்யை தடவி சுட்டு எடுக்கவும். சுவையான டால் பரோட்டா ரெடி. இதற்கு தொட்டுகொள்ள ஏதாவது ஒரு சட்னியோ அல்லது ரைத்தாவோ அல்லது ஊறுகாய் இருந்தாலே போதும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் ஸ்கூல் முடிஞ்சு வந்தா இதை செஞ்சு குடுங்க... தட்டுல ஒன்னு கூட மிஞ்சாது!
மீதமான உணவு

நீங்கள் மதியம் டால் செய்யவில்லை என்றாலும் கூட, சாயங்காலம் ஒரு கப் டாலை சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளுங்கள். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சியை போட்டு தாளிக்கவும்.

பிறகு ஒரு தக்காளி மற்றும் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்றாக வதக்கவும். பிறகு டாலை நன்றாக மசித்து அத்துடன் உப்பையும் போட்டு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீரை ஊற்றவும். சிறிது கெட்டியாக இருந்தால்தான் மாவு பிசைவதற்கு ஏதுவாக இருக்கும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி இழைகளைத் தூவி டால் ஆறிய பிறகு மேற்கூறியது போல் மாவை பிசைந்து பரோட்டாவை செய்யலாம்.

உங்கள் சமையலறையில் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தி, சுவை குன்றாத அதேசமயம் புதுமையான இரவு உணவை நொடிகளில் தயாரித்து, வீணாகும் உணவை ஆரோக்கியமான விருந்தாக மாற்றும் கலையை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com