சூப்பர் டேஸ்டில் கத்தரிக்காய் தயிர் குழம்பு - கோங்ரா பச்சடி ரெசிபிஸ்!

super taste- Gongra Pachadi Recipe
Healthy Samayal tipsImage credit - youtube.com
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு சுவையான கத்தரிக்காய் தயிர் குழம்பு மற்றும் கோங்ரா பச்சடி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

கத்தரிக்காய் தயிர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.

கத்தரிக்காய்-4

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-சிறிதளவு.

உப்பு -தேவையான அளவு.

தயிர்-2 கப்.

வெங்காயம்-1

தக்காளி-1

தேங்காய் எண்ணெய்-தேவையான அளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

கத்தரிக்காய் தயிர் குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் 4 கத்தரிகாயை சின்னதாக நறுக்கிக்கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு சிறிதளவு சேர்த்து அத்துடன் தண்ணீர் தெளித்து நன்றாக கலந்துவிட்டு இதை தேங்காய் எண்ணெய்யில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஃபேனில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்துவிட்டு சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, சிறிதாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துவிட்டு இதை 2 கப் தயிரில் சேர்த்துவிடவும். அத்துடன் வறுத்து வைத்திருக்கும் கத்தரிக்காயையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு சாதத்திற்கு பரிமாற வேண்டியதுதான். சுவையான கத்தரிக்காய் தயிர் குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கோங்ரா பச்சடி செய்ய தேவையான பொருட்கள்.

தனியா-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-5

எண்ணெய்-தேவையான அளவு.

புளிச்சக்கீரை-1 கைப்பிடி.

உப்பு-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் டேஸ்டில் கம்பு புட்டு - ஸ்வீட் வடை செய்யலாமா?
super taste- Gongra Pachadi Recipe

கோங்ரா பச்சடி செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 1 தேக்கரண்டி தனியா, 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். இத்துடன் 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி கடுகு, 5 வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் தாராளமாக சேர்த்து விட்டு புளிச்சக்கீரை 1 கைப்பிடி சேர்த்துக் கொள்ளவும்.

அதை நன்றாக வதக்கிய பிறகு தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்த மசாலை பவுடரை சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி சாதத்துடன் சேர்த்து பரிமாறவும். சுவையான கோங்ரா பச்சடி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com