குழந்தைகள் விரும்பும் மொறு மொறு மக்காச்சோள தோசை மற்றும் பஜ்ஜி மிளகாய் சட்னி!

Crunchy corn dosai
healthy dosai recipes
Published on

முறுகலான மக்காசோள தோசை

தேவை;

காய்ந்த மக்காசோளம்_2 கப்

பச்சரிசி_2 கப்

இட்லிஅரிசி_1 கப்

உளுந்து_1 கப்

கடலைப்பருப்பு_2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம்_1 டீஸ்பூன்

உப்பு _ தேவைக்கு

எண்ணெய் அல்லது நெய் தேவைக்கு

இதையும் படியுங்கள்:
சுவையான நூல் பரோட்டா - வெஜ் சால்னா!
Crunchy corn dosai

செய்முறை:  மக்காசோளத்தை 2-3 முறை நன்கு கழுகின பிறகு மூழ்கும் அளவு தண்ணீரில் 7-8 மணி நேரம் ஊற விடவும். அதேபோல் இட்லிஅரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக களைந்து தண்ணீர் விட்டு 4 மணி நேரம் ஊறவிடவும்.

கிரைண்டரில் அரிசி, பருப்பு மற்றும் சோளத்தை தனி தனியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டு மாவும் நன்கு கலந்து விட்டு தேவையான உப்பு சேர்த்து 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..

ஸ்டவ்வில் தோசை தவாவை வைத்து நன்கு சூடான பிறகு மாவை எடுத்து மெல்லிசான தோசையாக பரத்தி விடவும் ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பிவிட்டு சுற்றி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பொன் நிறமானதும் எடுத்து விடவும். அருமையான மொறு மொறு மக்காசோள தோசை தயார். குழதைகள் விரும்பும் வடிவில் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தோசையை வீட்டிலேயே செய்து குடுத்து விதவிதமான சட்னி சாம்பாருடன் சேர்த்து சுவைத்து அசத்தலாம்.

பஜ்ஜி மிளகாய் சட்னி

தேவை;

பஜ்ஜிமிளகாய்_ 4

தக்காளி_ 5

பூண்டு_ 10 பல்

நல்லெண்ணெய் _1/4 கப்

கொத்தமல்லி இலை_ ¼ கப் காய்ந்தமிளகாய்_ 2

பெரிய வெங்காயம்_ 2

உப்பு _ தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
சத்துக்கள் மிகுந்த சுவையான தட்டைப்பயறு சாதம் மற்றும் அத்திக்காய் வடை!
Crunchy corn dosai

செய்முறை: தக்காளி, வெங்காயம், மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். கண்ணாடி பதத்தில் வதங்கிய பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி மல்லித்தழை, காய்ந்த மிளகாய் சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும். கடைசியில் கொஞ்சமாக மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தக் கலவை நன்றாக ஆறியபின் மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கலாம். இட்லி தோசை சப்பாத்தி வகைகளுடன் பொருத்தமாக இருக்கும்.

ஸ்வீட் கார்ன் வெஜ் பணியாரம்

தேவை;

ஸ்வீட்கார்ன்_ 1/2 கப்

மிக்ஸட் வெஜிடபிள்ஸ்_ ½ கப்

பச்சைமிளகாய்_ 1

வெங்காயம்_ 1

சோளம்_ 1/2 கப்

பாசிபருப்பு_ ½ கப்

உளுந்து_ 2 டேபிள் ஸ்பூன்

உப்பு _ தேவைக்கு

எண்ணெய்_ தேவைக்கு

இதையும் படியுங்கள்:
வேஸ்ட்டாக்க வேண்டாமே ப்ளீஸ்...
Crunchy corn dosai

செய்முறை: ஸ்வீட் கார்ன் முத்துக்களை பிரித்து,மற்றும் காய்கறிகள், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் சோளம், பருப்பை நன்கு கழுவி, மூன்று மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸி ஜாரில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து, உப்பு சேர்த்து கலந்து தயாராக வைக்கவும். நறுக்கிய கார்ன், காய்களை கொஞ்சம் ஆவியில் வேகவைத்து, எடுத்து தயாராக வைக்கவும்.

பின்னர் பணியாரம் செய்யும் தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு குழியிலும் ஸ்வீட் கான், வெஜ் கலவையை வைத்து, அதன் மேல் அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும். மேலே கொஞ்சமாக எண்ணெய் ஊற்றவும். அதன் மேல் கொஞ்சம் கான், வெஜ் கலவையை தூவவும். மிதமான சூட்டில் மூடிவைத்து வேகவைக்கவும். பின்னர் திருப்பி போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

மிகவும் சுவையான, சத்தான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் கார்ன், வெஜ் பணியாரம் சுவைக்கத் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com