

முருங்கைப்பூ ரசம்
தேவை:
புளி - நெல்லி அளவு
தக்காளி - 1
முருங்கைபூ - 2 கைப்பிடி அளவு
மிளகு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வற மிளகாய் - 1
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
மிளகு, சீரகம்,மிக்ஸியில் அடித்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்த்தும் மிளகு கலவை, கருவேப்பிலை, வற்றல் சேர்த்து வதக்கவும்.
வதங்கியபின் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் பிசைந்த தக்காளி சேர்த்து வதக்கி புளி தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள் சேர்க்கவும்.
ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, மல்லித்தழை சேர்த்து பரிமாறவும். சூப்பரான முருங்கை பூ ரசம் ரெடி.
முருங்கைப்பூ பொரியல்.
தேவை:
முருங்கைப்பூ - 1 கப்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 2,
பாசிப்பருப்பு - கால் கப்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப,
சாம்பார்பொடி - முக்கால் டீஸ்பூன்.
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
நெய் - அரை ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை:
முதலில், முருங்கைப்பூவை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கை வைத்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும். வாணலை அடுப்பில் வைத்து சூடேற்றி நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பாசிப்பருப்பை மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து அரை அவியலாக வேக வைக்க வேண்டும். பின் அதில் நெய்யில் வதக்கிய முருங்கைப்பூவைப், வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்க்கவும். சுவையான செட்டிநாடு முருங்கைப்பூ பொரியல் ரெடி.
முருங்கை பூ சூப்
தேவை:
முருங்கை பூ – 2 கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
தக்காளி – 1 ( நறுக்கி கொள்ளவும்)
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்ட
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
செய்முறை:
புளியை சிறிதளவு நீரில் கரையுங்கள். அத்துடன் முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு கொதிக்க வையுங்கள். பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள்.
சூப்பர் சுவையில் முருங்கை பூ சூப் தயார். சளி, இருமலுக்கு நல்ல மருந்து இது.
முருங்கை பூ பாயசம்
தேவை:
முருங்கை பூ - 1 பிடி
பால் - 2 டம்ளர்
ஏலக்காய் - சிறிதளவு
பாதாம் பருப்பு - 5
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - 2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
முருங்கை பூவினை எடுத்து காம்புகளை நீக்கி, பூக்களை சுத்தம் செய்து, வாணலியில் 2 ஸ்பூன் நெய்விட்டு வதக்கவேண்டும்.
பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து தோல் நீக்கிய முருங்கை பூவுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
பின்னர் பாலை கொதிக்கவைத்து, அதில் அரைத்து வைத்த முருங்கை பூ, பாதாம் விழுது சேர்த்து அதனுடன் தேன் மற்றும் ஏலப்பொடியை சேர்த்து கொதிக்கவிடவும்.
சுவையான முருங்கை பாயசம் ரெடி.