
ப்ரோக்கோலி கிரேவி
தேவை:
ப்ரோக்கோலி - 1 (சிறியது)
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1/2
உருளைக்கிழங்கு - 2
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: ப்ரோக்கோலியை சிறு பூக்களாக பிரித்துக்கொள்ளவும். உருளையை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், குடைமிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் ப்ரோக்கோலி, உருளையை சேர்த்து வதக்கவும். தூள் வகைகள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
பின்னர் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும். மூடி போட்டு வேகவிடவும்.
காய்கள் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும். சுவையான ப்ரோக்கோலி கிரேவி தயார்.
*******
ப்ராக்கோலி பெப்பர் ஃப்ரை
தேவை:
ப்ராக்கோலி - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
உப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ஃப்ரை செய்வதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் ப்ராக்கோலி சேர்த்து 4-5 நிமிடம் வேகவைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவேண்டும்.
பின்ப அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, வேக வைத்துள்ள ப்ராக்கோலியை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி, பின் மிளகுத்தூளை சேர்த்துக்கிளறி இறக்கினால், ப்ராக்கோலி பெப்பர் ஃப்ரை ப்ரை ரெடி.
*******
ப்ரோக்கோலி சூப்.
தேவை:
ப்ரோக்கோலி - 2 கப் பூக்களாக வெட்டப்பட்டது
ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியதாக நறுக்கியது
பூண்டு - 2 பல் பொடியாக நறுக்கியது
தண்ணீர் - 2 கப்
பால் - ½ கப்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகு - தேவைக்கேற்ப
செய்முறை:
ப்ரோக்கோலியை சிறிய துருவங்களாக நறுக்கி நன்கு கழுவவும்.
ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்து அதனுடன் பால் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இப்போது அதில் ப்ரோக்கோலியைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும். இப்போது சுவைக்க உப்பு மற்றும் மிளகு சேர்த்து சூடாக பரிமாறவும். சூப்பர் ப்ராக்கோலி சூப் ரெடி.
*******
ப்ராக்கோலி 65
தேவை:
ப்ரோக்கோலி - 2 கப் (பூக்களாக வெட்டப் பட்டது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
ப்ரோக்கோலியை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
நறுக்கிய ப்ரோக்கோலியுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, சோம்பு, உப்பு, சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான ப்ரோக்கோலி 65 தயார்.