
பனிக்காலங்களில் அதிகமாக உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் கீழ்க்கண்ட ரசவகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
கொங்கு நாட்டு ஸ்பெஷல் கொள்ளு ரசம்:
தேவையான பொருள்கள் :
மிளகு -1 டேபிள்ஸ்பூன்
சீரகம்- 1/2 டேபிள்ஸ்பூன்
தனியா- 2 டேபிள் ஸ்பூன்
கொள்ளு- 1 டேபிள்ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு
பூண்டு- 15 பல்
சின்ன வெங்காயம்-10
தக்காளி-1
புளி - சிறிதளவு
வர மிளகாய் -1
மஞ்சள் தூள் -1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, தனியா, சீரகம்,கொள்ளு, கட்டி பெருங்காயம் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். பின்பு இதனோடு பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, புளி சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனோடு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கருவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய மல்லி இலை சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு, சின்ன வெங்காயம், வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து எடுத்த கலவையை இதனோடு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கொள்ளு ரசம் ரெடி!
செலவு ரசம்:
தேவையான பொருள்கள் :
சீரகம்-2 டேபிள்ஸ்பூன்
மிளகு-2 டேபிள்ஸ்பூன்
தனியா-2 டேபிள்ஸ்பூன்
பூண்டு-15 பல்
வெங்காயம்-20
மஞ்சள் தூள் -1/4 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய் -2
செய்முறை:
ஒரு வானலியில் சீரகம், மிளகு, தனியா சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். பின் இதனோடு பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதனை நன்கு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து நன்கு தாளித்து அரைத்து வைத்த கலவை இதனோடு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி எடுத்தால் சுவையான செலவு ரசம் ரெடி!
இருமல் மற்றும் சளி இருப்பவர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் விரைவில் குணமாகும்.