

தேவையான பொருட்கள்
பப்பாளிக்காய் மோர் குழம்புக்கு:
பப்பாளிக்காய் – 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கவும்)
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
தயிர் – 1 கப்
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் வற்றல் – 3
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்
செய்முறை:
மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், துவரம் பருப்பு, சிவப்பு மிளகாய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக மைய அரைக்கவும். இறுதியாக சின்ன வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய பப்பாளிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பப்பாளிக்காயை அரை உப்பு சேர்த்து வேகவிடவும்.
காய் அரைவேக்காடு வெந்தவுடன் அரைத்த கலவையைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். கலவை கெட்டியாக வந்தவுடன் தயிரை நன்கு கடைந்து சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி இறக்கி வைக்கவும்.
பப்பாளிக்காய் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்;
பொடியாக நறுக்கி வேகவைத்த பப்பாளிக்காய் – 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் (pepper) – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – ¼ சிட்டிகை
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி–பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி–பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு பப்பாளிக்காயை கையால் பொடித்து சேர்க்கவும்.
காய் வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கையும் பொடித்து சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து உப்பு சரிபார்த்து, மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வைத்துவிட்டு இறக்கவும்.
சூடாக இருக்கும்போது கார பூந்தி தூவி பரிமாறவும் – மிக சுவையாக இருக்கும்!
குறிப்பு: பழுப்பதற்கு சிறிது முந்தைய நிலையில் உள்ள காய் தேர்ந்தெடுக்கவும் இதில் பால் குறைவாக இருக்கும், மேலும் காயை நறுக்கி நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு உபயோகிக்கவும்.