சுவையான சிறுதானிய சமோஸா – ஹெல்தியான சூப் வகைகள்!

Small Grain Samosas – Healthy Soups!
healthy snacks
Published on

சிறுதானிய சமோஸா

தேவையான பொருட்கள்:

தினை - 1/4 கப்

கம்பு - 1/4 கப்

உருளைக்கிழங்கு - 1

சீரகம் - 1 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிதளவு

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 

மேல் மாவு தயாரிக்க:

மைதா - 1 கப் 

ரவை - 1/2 கப்

நெய் - 1/4 கப்

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - சிறிதளவு 

செய்முறை: 

பாத்திரத்தில் மைதாவை போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். சிறு உருண்டைகளாக்கி பூரிபோல் இட்டு தோசைக்கல்லில் லேசாகச் சுட்டெடுத்து இரண்டு அரைவட்டமாக கத்தரித்து வைக்கவும்.

தினை, கம்பு வறுத்து ரவையைப்போல் உடைத்து அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சிறிது மசாலா பவுடர், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரை வட்டமாக உள்ள பூரியின் நடுவே தினை மசாலாவை வைத்த மூன்று பக்கமும் தண்ணீர்தொட்டு ஓட்டி, முக்கோண வடிவம் செய்து வைக்கவும்.  வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காயவைத்து, மிதமான தீயில் இரண்டிரண்டாக பொரித் தெடுக்கவும். தக்காளி சாஸூடன் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

கொள்ளு சூப்

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1/2 கப்

தக்காளி - 3

எலுமிச்சைப் பழச்சாறு - 1/2 டீஸ்பூன் 

மல்லித் தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

நெய் - 2 தேக்கரண்டி

மிளகு - 1/2 டீஸ்பூன் 

சீரகம் - 1/2 டீஸ்பூன் 

பூண்டு - 2 பல்

கறிவேப்பிலை - சிறிது

இதையும் படியுங்கள்:
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் கீரை, காய்கறிகள் எப்படி சமைக்கவேண்டும் தெரியுமா?
Small Grain Samosas – Healthy Soups!

செய்முறை: 

முதல் நாள் இரவே கொள்ளை ஊறவைத்து , மறுநாள் மூன்று கப் தண்ணீரை ஊற்றி குக்கரில் வேகவைத்து, தண்ணீரை வடித்துவிடவும்.  மிளகு, சீரகத்தை மையாக அரைத்து, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தட்டிப் போடவும். நெய்யை காயவைத்து தக்காளி,  உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, அரைத்த விழுது சேர்த்து இன்னும் மூன்று நிமிடங்கள் வதக்கவும். கொள்ளு வேக வைத்த தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து மல்லித்தழையை சேர்த்து பரிமாறவும்.

ஆவாரம் பூ சூப்

தேவையான பொருள்கள்;

ஈரமான ஆவாரம்பூ - 1 கப்

உலர்ந்த பொடி - 2 தேக்கரண்டி

தண்ணீர்- 250 மில்லி

கேரட் - 1

பீன்ஸ் 

தக்காளி - 1

வெங்காயம்

இஞ்சி

பூண்டு - 2 பல்

கொத்தமல்லி

புதினா - சிறிதளவு

மிளகுத் தூள்

சீரகத் தூள்

உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
கும்பகோணம் மொறு மொறு ரவா தோசை - கல்யாண வீட்டு ப்ரூட் கேசரி!
Small Grain Samosas – Healthy Soups!

செய்முறை:

தண்ணீரில் ஆவாரம் பூவைக் கரைக்கவும். கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி தண்ணீர்விட்டு வேகவிடவும், நன்றாக வாசனை வரும்போது, மசித்து அடுப்பை அனைத்துவிட்டு, சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும். இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அருமருந்தாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com