மழைக்கு இப்படி பருப்பு சூப் செஞ்சு சாப்பிடுங்க! 

Dhal soup
Dhal soup
Published on

பருப்பு சூப் ஒரு ஆரோக்கியமான சுவை மிகுந்த உணவாகும். இது தயாரிக்க எளிதானது. அனைத்து வயதினருமா இதை சாப்பிடலாம். குளிர்காலத்தில் சூடாக இந்த சூப் அருந்துவது மிகவும் நல்லது. இது உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் உடல் நலம் குன்றியவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. பல்வேறு வகையான பருப்புக்களை பயன்படுத்தி இந்த சூப்பை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • துவரம் பருப்பு - 1/2 கப்

  • பாசி பருப்பு - 1/4 கப்

  • தக்காளி - 2 (நறுக்கியது)

  • வெங்காயம் - 1 (நறுக்கியது)

  • பூண்டு - 2 பல் (நறுக்கியது)

  • இஞ்சி - 1 சிறிய துண்டு (நறுக்கியது)

  • பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

  • சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

  • மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

  • கொத்தமல்லி தழை - சிறிதளவு (நறுக்கியது)

  • நெய் அல்லது எண்ணெய் - 1 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான அன்னவரம் பிரசாதம் - அவரைக்காய் பருப்பு உசிலி செய்யலாம் வாங்க!
Dhal soup

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்றாக கழுவி, 15-20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்ததாக தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மசியும் வரை வதக்கவும்.

ஊறவைத்த பருப்பு, மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2-3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

குக்கரின் அழுத்தம் குறைந்ததும், மூடியைத் திறந்து சூப்பை மசிக்கவும். மத்து அல்லது கரண்டி பயன்படுத்தி மசிக்கலாம் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம். பின்னர், மீண்டும் சூப்பை அடுப்பில் வைத்து, மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். அவ்வளவுதான், சூடான மற்றும் சத்தான பருப்பு சூப் தயார்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் வாழைத்தண்டு சூப் - மாதுளை பொரியல் ரெசிபிஸ்!
Dhal soup

எளிமையான பொருட்கள் மற்றும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய இந்த சூப், அவசரமான சமயங்களில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். வெவ்வேறு வகையான பருப்புக்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பதன் மூலம், இந்த சூப்பின் சுவையை மேலும் அதிகரிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com