ஹோட்டல் ஸ்டைல் கார சட்னியுடன் பஞ்சு போன்ற மோமோஸ்: ரகசியம் இதுதான்!

easy momos recipe
easy momos recipe
Updated on

மோமோஸ் செய்வது என்றால் அதிக நேரம் பிடிக்கும், வேலைகளும் அதிகம் என்று நினைப்பவர்களுக்கு இதோ ஒரு எளிய தீர்வு. வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சுவையான சட்பட் மோமோஸை எளிதாகத் தயாரிக்கலாம்.

சட்பட் மோமோஸ்

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்

துருவிய கேரட் – 1 கப்

வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 கப்

கரம் மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

பொதினா – சிறிதளவு

இஞ்சித் துருவல் – 2 டீஸ்பூன்

மைதா மாவு – 1 கப்

தாளிக்க:

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சித்துருவலைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் துருவிய கேரட்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பொதினா, மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

இறுதியாக வேகவைத்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி மசித்து சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆறவிடவும்.

ஒரு கிண்ணத்தில் பாதி அளவு மைதா மாவை எடுத்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள மைதா மாவை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.

ஆறிய காய்கறிக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டைகளை மைதா கரைசலில் தோய்த்து, பின்னர் உலர் மைதா மாவில் பிரட்டி எடுக்கவும்.

ஸ்டீமர் தட்டில் அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான சட்பட் மோமோஸ் தயார்!

மோமோஸ் கார சட்னி

தேவையான பொருட்கள்:

தக்காளி – 3 No

காய்ந்த சிவப்பு மிளகாய் – 8 முதல் 10 No

பூண்டு – 6 பல்

இஞ்சி – 1 சிறிய துண்டு

வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – ½ டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
சுவையான சமையல் குறிப்புகள்: பருப்பு அடை முதல் லட்டு வரை வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய டிப்ஸ்!
easy momos recipe

செய்முறை:

காய்ந்த சிவப்பு மிளகாய்களை 15 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைக்கவும். தக்காளியை 5 நிமிடங்கள் வேகவைத்து தோலை நீக்கவும்.

மிக்ஸியில் தக்காளி, ஊறவைத்த மிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். இறுதியாக வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.

இறுதியாக சுவையைச் சமநிலைப்படுத்த சிறிதளவு சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.

எளிதில் செய்யக்கூடிய இந்த கார சட்னி, மோமோஸின் சுவையை பல மடங்கு உயர்த்தும். மேலும், ஒரு டீஸ்பூன் மயோனெய்ஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் சில்லி சாஸை கலந்து டிப் தயாரித்து மோமோஸுடன் பரிமாறினால் ரெஸ்டாரண்ட் சுவையை வீட்டிலேயே அனுபவிக்கலாம்.

மாலை நேர சிற்றுண்டிக்கோ, குழந்தைகளின் விருப்ப உணவாகவோ, திடீர் விருந்தினர்களுக்கோ இந்த சட்பட் மோமோஸ் சிறந்த தேர்வாக இருக்கும். கார சட்னியுடன் சேர்த்து பரிமாறினால், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவை கொண்டது!

logo
Kalki Online
kalkionline.com