5 நிமிடத்தில் ரெடியாகும் விரத கால தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருள் சேர்த்தா டேஸ்ட் சும்மா அள்ளும்!

falahari-coconut-chutney
falahari-coconut-chutney
Published on

ஏகாதசி, சிவராத்திரி, நவராத்திரி போன்ற விரத நாட்களில் சாதாரண உணவுகளைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் சில குறிப்பிட்ட காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவதை 'ஃபாலஹரி' (Falahari) உணவு முறை என்கிறோம். விரத நாட்களில் ஜவ்வரிசி கிச்சடி அல்லது விரத தோசை செய்யும்போது, தொட்டுக்கொள்ள வழக்கமான தேங்காய் சட்னியை நாம் அரைக்க முடியாது. 

ஏனென்றால், விரத சமையலில் உளுந்து, கடுகு, சாதாரண உப்பு போன்றவற்றைச் சேர்க்கக்கூடாது. ஆனால், சுவை சற்றும் குறையாமல், உடலுக்கும் அதிக சத்துக்களைத் தரும் ஆரோக்கியமான 'ஃபாலஹரி தேங்காய் சட்னி' எப்படி வெறும் 5 நிமிடத்தில் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • துருவிய தேங்காய் - 1 கப்

  • வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2

  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு

  • இந்துப்பு - தேவையான அளவு

  • கெட்டித் தயிர் அல்லது எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

  • தண்ணீர் - தேவையான அளவு

  • நெய் - 1 டீஸ்பூன்

  • சீரகம் - 1/2 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை! 

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், துருவி வைத்துள்ள ஃப்ரெஷ்ஷான தேங்காயைச் சேர்க்கவும். இதோடு, சட்னிக்கு ஒரு நல்ல கெட்டித்தன்மையையும், கூடுதல் சுவையையும், உடலுக்குத் தேவையான புரதச்சத்தையும் தரக்கூடிய வறுத்த வேர்க்கடலையைத் தோல் நீக்கிவிட்டுச் சேர்த்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
புரதச்சத்து நிறைந்த 'பச்சை மொச்சை' ஸ்பெஷல்: கூட்டு முதல் தோசை வரை அசத்தலான ரெசிபிகள்!
falahari-coconut-chutney

உங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் மற்றும் தோலுரித்த இஞ்சித் துண்டைப் போடவும். ஃபாலஹரி சட்னி என்பதால், சாதாரண கல்லுப்புக்குப் பதிலாக, தாதுக்கள் நிறைந்த 'இந்துப்பு' சேர்ப்பதுதான் இதன் மிக முக்கியமான படி. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. கடைசியாக, சட்னிக்கு லேசான புளிப்புச் சுவை தர, ஒரு ஸ்பூன் கெட்டித் தயிர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிய பின், தாளிப்பு கரண்டியை அடுப்பில் வையுங்கள். வழக்கமாக நாம் எண்ணெய் மற்றும் கடுகு பயன்படுத்துவோம். ஆனால் ஃபாலஹரி முறையில், ஒரு ஸ்பூன் தூசமான நெய் விட்டு, அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலை மட்டும் சேர்த்துப் பொரிய விட வேண்டும். 

நெய்யில் பொரிந்த சீரகத்தின் வாசனை சட்னியின் சுவையை பல மடங்கு கூட்டும். தாளிப்பை அப்படியே அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டி நன்றாகக் கலந்து விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை: செயற்கை நகங்களின் மறுபக்கம்!
falahari-coconut-chutney

எந்தவிதமான செயற்கை சுவையூட்டிகளோ, வெங்காயம், உளுந்து போன்றவைகளோ இல்லாமல், மிகவும் தூய்மையான முறையில் ஃபாலஹரி தேங்காய் சட்னி தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com