

தீபாவளி பலகாரங்கள் பலவிதம். அதில் அல்வா என்றாலே அதை சுவைக்க தனிரசிகர்கள் உண்டு. வாயில் போட்டாலே கண்ணாடி போல் பளபளப்பாக வழுக்கிக்கொண்டு போகும் அல்வாவை விரும் போதோர் இருக்க முடியாது.
அல்வா வரலாறு:
இந்த அல்வா எப்படி வந்தது? பிரபலமானது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அல்வா என்ற பெயர் அரேபிய மொழியில் இருந்து வந்தது. இதற்கு இனிப்பு என்று பொருள். அல்வா 13ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மெவ்லானா ஜலாலுதீன் இரூம் என்பவர் எழுதிய உணவுப் பொருட்களுக்கான நூல் குறிப்பில் அல்வா இடம் பெற்றுள்ளது.15ம் நூற்றாண்டில் சுலைமான் தி மக்னிஃபிஷண்ட் என்ற புகழ்பெற்ற ஒரு சுல்தான் அல்வா தயாரிப்பதற்காக ஹல்வா ஹானே என்ற சமையலறையை உருவாக்கினார்.
கிரேக்கர்கள் செங்கல் வடிவத்தில் மேக்டோனி கோஸ் என்ற அல்வா தயாரித்து அதில் எலுமிச்சைசாறு தெளித்து உண்பர்.
பல்கேரியாவில் வெண்மை நிறத்தில் அல்வா தயாரிப்பர். அது ஹாம்கேன் என்ற சடங்கில் பயன்படுத்தப்படும்.
டெல்லி இட்லி என்று செல்லமாக அழைக்கப்படும் சோஹன் அல்வா சலன்மால் என்பவரால் 18ம் நூற்றாண்டில் பிரபலமானது.
நம் நாட்டில் அல்வாவை ஸ்நாக் போல சாப்பிடுவோம். ஈரான் நாட்டில் அல்வா உணவாகவே சாப்பிடப்படுகிறது.
பெர்லின் நாட்டில் பிரெட் இடையே அல்வாவை வைத்து சாண்ட்விச் போல சாப்பிடுவார்கள்.
துருக்கியில் வாழும் இஸ்லாமியர்களுக்கு ஒரு வழக்கம் உள்ளது. அங்கு யாராவது இறந்துவிட்டால் 7வது மற்றும் 40வது நாளில் அந்த தெருவில் உள்ளவர்களுக்கு ஒருவகை அல்வா செய்து தருவார்கள். அதற்கு இறந்தவர்களின் அல்வா என்றே பெயர்.
துருக்கியர்கள் அல்வா செய்து அதை கம்பி பாகு போல இழுத்து பிறகு உருண்டையாக உருட்டி பர்ஃபி போல செய்வார்கள்.
இந்த அல்வா 16ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தது. ருமேனியாவில் சூரியகாந்தி விதைகளை வைத்து அல்வா செய்வார்கள்.
யூதர்களின் அல்வா வில் சபோரினா என்கிற வேரும், எள்ளும்தான் முக்கிய பொருள்.
கிரீஸ் நாட்டில் சீஸ் அல்வா பிரபலம். ஈரானிய மக்களுக்கு ரமலான் நோன்பை முடித்து வைக்கும் உணவு அல்வாதான்.
திருநெல்வேலி இருட்டு கடை அல்வா இன்றும் பேமஸாக உள்ளது. கேரள அலுவா, காரைக்கால் அல்வா, காசி ஹல்வா பிரபலம்.
அல்வாவில் பல வெரைட்டிகள் வந்துவிட்டன. கோதுமை அல்வா முதல் பாதாம் அல்வா, கேசர் அல்வா என பல கடைகள் வித்தியாசமான சுவையில் அல்வாக்களை தந்து நாவிற்கு விருந்து படைக்கின்றனர்.
ஹல்வாவை முழுவதுமாக நெய்யில் செய்தால் திகட்டாமல் இருக்கும். அல்வா பதம் விரைவில் வர கார்ன்ஃப்ளேக்ஸை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து சேர்க்க திக்காக, பளபளப்பாக சேர்ந்து வரும்.
அல்வாவில் நட்ஸ் துருவல், சாஃப்ரான் கலர் சேர்த்து இறக்கும்போது வெள்ளரி விதை சேர்த்து இறக்க சுவை நன்றாக இருக்கும்.
இவ்வாறு அல்வா பூர்வீகமாக பிரபலமாகி நம் நாவிற்கு சுவை தருகிறது.
உலகளாவிய பாரம்பரியம் மற்றும் பல்வேறு நாடுகளின் சுவை கலாச்சாரங்களை அறிந்துகொள்வதன் மூலம், இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டிலேயே பாரம்பரிய சுவையில் அல்வா தயாரித்து குடும்பத்தினரை வியக்க வைக்கலாம்.