உடலுக்குக் குளிர்ச்சி தரும் சுரைக்காய்: அரிய 3 சுவைமிகுந்த உணவுகள்!

bottle gourd recipe
bottle gourd recipe
Updated on

சுரைக்காய் சட்னி

தேவை:

சுரைக்காய் - 1 கப் (நறுக்கியது)

வெங்காயம் - 1 

தேங்காய்த் துருவல் - கால் கப்

புளி - நெல்லிக்காய் அளவு 

கொத்தமல்லித் தழை - 2 கைப்பிடி

பச்சை மிளகாய் - 4

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன் 

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: 

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறவைத்து, பின் மிக்ஸில் வதக்கிய கலவை மற்றும் தேங்காய் துருவல், புளி சேர்த்து அரைக்கவும். இன்னொரு கடாயில் எண்ணெயில் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்.  சுவை மிகுந்த சுரைக்காய் சட்னி தயார். தோசை, இட்லி, உப்புமா இவைகளுக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.

சுரைக்காய் பாயாசம்

தேவை:

சுரைக்காய் - 1 (சிறியது)

தண்ணீர் - 2 கப்

நெய் - 1/2 டீஸ்பூன்

முந்திரி பருப்பு - 6 

பசும் பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை - அரை கப் 

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
நாவூறும் சுவையில் தட்டைப் பயறு காரக்குழம்பு செய்வது எப்படி?
bottle gourd recipe

செய்முறை:

சுரைக்காயை தோலுரித்து நைசாக துருவிக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி, துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.  சிறிது நேரத்தில் தண்ணீரை வடிகட்டி விட்டு சுரைக்காயை தனியாக எடுத்துவிடவும்.

அடுப்பில் கனமான பாத்திரத்தில் சூடான பால் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.

மற்றொரு அடுப்பில் வேறு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி, முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். அதனுடன் வடிகட்டி வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கிளறவும்.

பால் நன்றாக கொதித்ததும் அடுப்பில் உள்ள சுரைக்காயை அதனுடன் சேர்க்கவும். பின்னர் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை கிளறவும். அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும்.  சத்தான சுவையான சுரைக்காய் பாயாசம் ரெடி.

சுரைக்காய் சாதம்

தேவை:

அரிசி - அரை கிலோ 

சுரைக்காய் - கால் கிலோ 

பெரிய வெங்காயம் - 1 

தக்காளி - 1 

பச்சை மிளகாய் - 2 

சோம்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 கொத்து

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன் 

மல்லித்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு -  தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
கெட் டு கெதருக்கு செம்ம ஹிட்! ஸ்டஃப்ட் தக்காளி, ஆந்திரா கொத்தவரங்காய் கிரேவி!
bottle gourd recipe

செய்முறை: 

சுரைக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் சுரைக்காய் துருவல், மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு சுரைக்காய் முக்கால் பாகம் வேகும் வரை  வேக வைக்கவும்.

அரிசியை நன்றாக கழுவி குக்கரில் உள்ள கலவையுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவிடவும். பின் 1 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும். சூப்பர் சுவையில் சுரைக்காய் சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள வெள்ளரி தயிர் பச்சடி வெகு பொருத்தம்.

logo
Kalki Online
kalkionline.com