கோடைகால சூட்டைத் தணிக்கும் 6 வகை மூலிகை மோர்கள்!

உடல் ஆரோக்கியமும் நாவின் ருசியும் ஒருங்கே பெற உதவும் பிரத்யேக மோர் ரெசிபிகள்.
மோர் ரெசிபிகள்
மோர் ரெசிபிகள்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நாக்குக்கு ருசியாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக இருக்கும் இந்த ரெசிபிகளை முயற்சித்துத்தான் பாருங்களேன்!

1. ஸ்வீட் கிரீம் மோர்(Sweet Cream Buttermilk):

ஹெவி விப்பிங் கிரீம்(Heavy Whipping cream) -2 கப்

சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்

உப்பு -ஒரு சிட்டிகை

செய்முறை: ஸ்வீட் கிரீம் மோர் என்பது வெண்ணெய் எடுக்கும்போது கிடைக்கும், அசத்தலான சுவையில் இருக்கும் இனிப்பான லேசான மோராகும்.

குளிர்ந்த ஹெவி கிரீமை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு அடிக்கும்பொழுது, கிரீம் தடிமனாகி பின்னர் வெண்ணை தனியாகவும், மோர் தனியாகவும் பிரியும். வெண்ணெய் முழுமையாகப் பிரிந்து மோர் தெளிவாகத் தெரியும் வரை அடிக்கவும். இந்தக் கலவையை ஒரு மெல்லிய துணி அல்லது வடிகட்டி மூலம் வடிகட்டவும். வடிகட்டிய பிறகு கிடைக்கும் மோர் இனிப்பான, கிரீமியான, மிகவும் சுவையான மோராகும்.

தொண்டைக்கு இதமான மிகவும் ருசியான, சுவையான ஸ்வீட் கிரீம் மோர் தயார்.

2. கலர்ஃபுல் பீட்ரூட் மோர்:

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இயற்கையான பிங்க் நிறத்தில் சுவையுடன் இருக்கும்.

பீட்ரூட் சிறியது -1

தயிர் -1/2 கப்

இஞ்சி -ஒரு துண்டு

பச்சை மிளகாய் -1

உப்பு -தேவையானது

தண்ணீர்- தேவையானது

செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி வேகவைத்து நறுக்கவும். அத்துடன் தோல் நீக்கிய இஞ்சித்துண்டு, பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு அனைத்தையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். கடுகு, கருவேப்பிலையை சிறிது நல்லெண்ணெயில் தாளித்து மோரில் கலக்க மிகவும் ருசியான பீட்ரூட் மோர் தயார்.

மோர் ரெசிபிகள்
மோர் ரெசிபிகள்Gemini image

3. கேரட் மோர்:

விட்டமின் ஏ நிறைந்த கேரட் கண்பார்வையை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். இது உடல் சூட்டைத் தணித்து செரிமானத்துக்கு உதவும் ஆரோக்கியமான மற்றும் குளிர்ச்சியான கோடைக்கால பானமாகும்.

துருவிய கேரட் -1/2 கப்

இஞ்சித் துண்டு -சிறிது

மிளகுத்தூள் -1 ஸ்பூன்

கொத்தமல்லி -சிறிது

கெட்டி மோர் -1 கப்

உப்பு -தேவையானது

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்திற்கு சுடச்சுட மொறுமொறு பக்கோடா: எண்ணெய் குடிக்காமல் செய்ய இதோ வழி!
மோர் ரெசிபிகள்

செய்முறை: கேரட், இஞ்சி, மிளகு தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பு போட்டு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். வடிக்கட்டி மோர் கலந்து பரிமாறலாம். விருப்பப்பட்டால் கடுகு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கலாம். வடிகட்டிய கேரட் சக்கையை சப்பாத்தி மாவில் சேர்த்து பிசைந்து பயன்படுத்தலாம்.

கெட்டி மோருக்கு பதிலாக பாதாம் பால் (Almond milk) பயன்படுத்த ஒரு வீகன் பானமாக மாறும்.

4. துவர்ப்பு சுவை மிகுந்த நெல்லிக்காய் மோர் (Amla Buttermilk):

உடல் சூடு, பித்தம், உடல் எடை குறைய, செரிமானத்தை மேம்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் மோர் சிறந்த சாய்ஸ். வைட்டமின் சி நிறைந்த குளிர்ச்சியான பானம் இது.

பெரிய நெல்லிக்காய் -2

கெட்டி மோர் -1 கப்

பச்சை மிளகாய் -1

இஞ்சி -சிறு துண்டு

கொத்தமல்லி, கருவேப்பிலை -சிறிது

உப்பு -தேவையானது

வறுத்த சீரகப்பொடி -1/2 ஸ்பூன்

தண்ணீர் -தேவையானது

செய்முறை: கொட்டை நீக்கிய நெல்லிக்காய், தோல் நீக்கிய இஞ்சித்துண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, கெட்டிமோர் சேர்த்து அரைத்து தேவையான அளவு நீர் கலந்து வடிகட்டிக் கொள்ளவும். வறுத்த சீரகப்பொடி தூவி பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஒரு வருடம் கெடாத பாட்டி காலத்து நெல்லிக்காய் ஊறுகாய்: சீக்ரெட் ரெசிபி!
மோர் ரெசிபிகள்

5. தாளிப்பு மோர்:

கெட்டிமோர் -1 கப்

உப்பு -தேவையானது

கடுகு, கருவேப்பிலை, சீரகம்-சிறிதளவு

தாளிக்க எண்ணெய் -1/2 ஸ்பூன்

மாங்காய் துண்டுகள் -சிறிது

செய்முறை: கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்த மோரில் உப்பு, பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து பருக தொண்டைக்கு இதமாக, அமிர்தமாக இருக்கும் இந்த பானம்.

6. மின்ட் கூலர்:

உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும். மணமும் ருசியும் மிகுந்த ஹெர்பல் மோர் இது.

புதினா இலைகள் -1 கைப்பிடி

எலுமிச்சை சாறு -2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை (அ) தேன் சுவைக்கேற்ப

சோடா அல்லது தண்ணீர்-தேவைக்கேற்ப

செய்முறை: மிக்ஸியில் புதினா, எலுமிச்சை சாறு, சர்க்கரை அல்லது தேன், சிறிது தண்ணீர் கலந்து அரைத்துக்கொள்ளவும். இதனை வடிகட்டி எடுத்துக்கொண்டு அத்துடன் குளிர்ந்த நீர் அல்லது சோடா கலந்து, மேலாக வறுத்த சீரகத்தூள் சேர்க்க மிகவும் ருசியாக இருக்கும். புதினா இலைகள் ஒன்றிரண்டைத் தூவி ஐஸ்கட்டி சேர்த்து பரிமாற வேண்டியதுதான்.

இந்த மோர் ரெசிபிகள் பானங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு தணிந்து, செரிமானக் கோளாறுகள் நீங்குவதோடு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் புத்துணர்ச்சியும் தடையின்றி கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com