எலும்புகளை வலுவாக்கும் கொண்டைக்கடலை! சுவையான கிராமத்து ஸ்டைல் குழம்பு ரகசியம் இதோ!

kondakadle kulambu recipe
kondakadle kulambu recipe
Updated on

கொண்டைக்கடலை ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகும். அதிக அளவு புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பு சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்துகிறது. சுவையான கமகமக்கும் கொண்டை கடலை குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

கொண்டைக்கடலை - 500 கிராம் 

வெங்காயம்              -  20 கிராம் 

தக்காளி                    - 20 கிராம் 

கத்தரிக்காய்             - 200 கிராம்

முருங்கைக்காய்       -  3

பச்சை மிளகாய்       - 4 

தேங்காய்                  - அரை மூடி 

புளி                            - தேவையான அளவு 

எண்ணெய்               - தேவையான அளவு 

கடுகு                          - தேவையான அளவு 

கருவேப்பிலை        -  தேவையான அளவு 

மல்லித்தலை            - தேவையான அளவு 

உப்பு                           - தேவையான அளவு 

பெருங்காயத்தூள்  - தேவையான அளவு 

வீட்டு மசால் பொடி  - தேவையான அளவு 

இஞ்சி                        - தேவையான அளவு

செய்முறை: 

கொண்டைக்கடலையை நன்கு கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவேண்டும். கொண்டைக்கடலை நன்கு உரிய உடன் குக்கரில் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். குக்கரின் பிரஷர் அடங்கியவுடன் கொண்டைக்கடலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிறிதளவு புளியை நன்கு கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்த உடன் கருவேப்பிலை, தக்காளி, வெங்காயம் நன்கு மசிந்து வரும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் தேவையான அளவு கத்தரிக்காய், மூன்று முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கிகொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு வெங்காயம், தேங்காய், இஞ்சி சேர்த்து நன்கு மையாகும் வரை அரைத்துகொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய் நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வந்தவுடன் தேவையான அளவு வீட்டு மசால் பொடி அரைத்து வைத்திருந்த தேங்காய், வெங்காயம் கலவையை சேர்த்து நன்கு கிளறி கொடுக்கவேண்டும். தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், கொண்டைக்கடலை வேகவைத்த நீர் சேர்த்து நன்கு 5 நிமிடங்கள் கொதிக்கவைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கிராமத்து கைமணம் மாறாத மொச்சை காரக்குழம்பு ரகசியம்!
kondakadle kulambu recipe

இதனுடன் நாம் கரைத்து வைத்திருந்த புளிக்கரைசலையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும் காய்கறிகள் நன்கு வெந்து வந்தவுடன் வேகவைத்திருந்த கொண்டைக்கடலையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்கவைக்க வேண்டும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து இறக்கவேண்டும். சுவையான கமகமக்கும் ஆரோக்கியமிக்க கொண்டைக்கடலை குழம்பு தயார்.

logo
Kalki Online
kalkionline.com