வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு இருக்கிறதா? அப்போ இந்த வைரஸ் தாக்கலாக இருக்கலாம்... அலட்சியம் வேண்டாம்!

நோரோ வைரஸ், வயிறு மற்றும் குடலில் அழற்சியை ஏற்படுத்தும் தொற்றுநோயாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
norovirus
norovirusimage credit - TravelAge West
Published on

குளிர்காலம் வந்து விட்டாலே இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிலும் பல்வேறு வைரஸ் நோய்கள் உலா வர ஆரம்பித்து விடுகின்றன. பல வைரஸ்கள் பல ஆண்டுகளாக இருந்தாலும், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் வைரஸ் என்ற சொல்லை கேட்டாலே பீதியடைய ஆரம்பித்து விடுகின்றனர்.

பொதுவாக நோரோ வைரஸ், குளிர்காலத்தில்தான் பரவும் தன்மை கொண்டது. குளிர் காலத்தில் பரவும் பல வைரஸ்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சில வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன.

தற்போது நோரோ வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நோரோ வைரஸ் என்ற கிருமி மிரட்டி வருவதாகவே சொல்லப்படுகிறது. தற்போது அங்கு குளிர்காலம் என்பதால் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். அமெரிக்காவில் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு நோரோ வைரஸ் முக்கிய காரணமாகும்.

நோரோ வைரஸ், வயிறு மற்றும் குடலில் அழற்சியை ஏற்படுத்தும் தொற்றுநோயாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தொற்று பெரும்பாலும், ‘வயிற்று காய்ச்சல்’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வைரஸ் உடலில் நுழைந்த உடன் பாதிக்கப்பட்ட நபருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு, ஆகிய அறிகுறிகள் ஏற்படுகின்றன. காய்ச்சல், குளிர், தலைவலி மற்றும் தசை வலி ஆகிய அறிகுறிகளும் இருக்கலாம். பொதுவாக இந்த அறிகுறிகள், வைரஸ் கிருமி உடலுக்குள் நுழைந்த 2 நாட்களுக்குப் பிறகு தெரிய ஆரம்பிக்கும். நோரோ வைரஸ் நோய்த்தொற்று பெரும்பாலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களை பாதிக்கிறது.

இதையும் படியுங்கள்:
"இது எதையும் நீங்க செய்ய போறது இல்ல..." அனைவர் வாயையும் அடைத்த ஸ்ருதிஹாசன்
norovirus

நோரோ வைரஸ் விரைவில் பரவும் நோய் தொற்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த கிருமியால் பாதிக்கப்படும்போது உடலில் நீரிழப்பு ஏற்பட்டு பலவீனம் அடைகிறார்கள். எனவே இந்த நோரோ வைரஸ் விஷயத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும் என வெளிநாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் மோசமான விளைவுகள் மற்றும் உயிர்சேதம் எதுவும் ஏற்படாது. ஆனால் நோரோ வைரஸ் நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி எதுவும் இல்லை. இந்த தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. நோய் பொதுவாக ஒரு சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால் நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு கூடுதல் நாட்கள் ஆகலாம். உடலில் நீரிழப்பை தடுக்க நிறைய நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வைரஸ் கெட்டுப்போன உணவு, தண்ணீர் உள்ளிட்டவை மூலம் எளிதில் பரவக்கூடியது. மருத்துவமனை, அடுக்கு படுக்கைகள் கொண்ட டார்மிடரிஸில், பூட்டப்பட்ட அறைகளை கொண்ட பகுதியில் இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது. இந்த வைரஸ் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கூட உயிர்வாழும் தன்மை கொண்டதாகும். அதுமட்டுமில்லாமல் சில கிருமிநாசினியினால் கூட இந்த வைரஸை கொல்ல முடியாது.

இதையும் படியுங்கள்:
‘பராசக்தி’யால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சிக்கல்!
norovirus

நோரோ வைரஸ் தொற்றுநோய் என்பதால் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க, உங்கள் கைகளை அடிக்கடி நன்றாக கழுவவும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவிய பின்னர் சாப்பிடவும். வீட்டின் தரையை அடிக்கடி சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

நோய் தொற்று உள்ளவர்கள் சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள், பால் பொருட்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், வறுத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காஃபின் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது வயிற்றுப்போக்கை மேலும் மோசமாக்கும் என்பதால் இவற்றை சில நாட்களுக்கு தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
இளையராஜாவின் சிம்பொனி இசை பயண வீடியோ - சமூக வலைதளங்களில் வைரல்
norovirus

இந்த நோய்த்தொற்று உள்ளவர்கள் வாழைப்பழம், ஆரஞ்சு, முலாம்பழம், வெண்ணெய்ப்பழம் போன்ற பழங்களையும், உருளைக்கிழங்கு, கீரை மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகளையும் சாப்பிடுவது நல்லது.

நோயின் போது மற்றும் குணமடைந்த பல நாட்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை முடிந்தவரை தவிர்த்து விடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com