சுடச் சுட ஆரோக்கியம்! சத்தான அக்கி ரொட்டி மற்றும் கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி?

healthy foods in tamil
healthy foods in tamil
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on

அவரமணி (பச்சை மொச்சைப் பருப்பு) அக்கி ரொட்டி ரெசிபி

தேவையான பொருட்கள்:

1.அரிசி மாவு 2 கப்

2.ஊறவைத்து தோலுரித்த (raw)

மொச்சைப் பருப்பு 1 கப்

3.சீரகம் 1 டீஸ்பூன்

4.எள்ளு 1 டீஸ்பூன்

5.இஞ்சி பச்சை மிளகாய் பேஸ்ட் 1½ டீஸ்பூன்

6.நறுக்கிய வெங்காயம் ¾ டேபிள் ஸ்பூன்

7.நறுக்கிய கேரட் ¾ டேபிள் ஸ்பூன்

8.நறுக்கிய தேங்காய் பல் ¾ டேபிள் ஸ்பூன்

9.மல்லி இலை ¾ டேபிள் ஸ்பூன்

10.உப்பு தேவையான அளவு

11.நெய் 4 டேபிள் ஸ்பூன்

12.இளஞ் சூடான தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பரந்த தாம்பாளத்தில் மேலே கூறியுள்ள 1-10 வரையிலான பொருட்களைப் போட்டு கைகளால் நன்கு கலந்துவிடவும். பின் 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர்.

தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் ஒரு வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் நெய் தடவி அதன் மீது பிசைந்து வைத்த மாவிலிருந்து சற்று பெரிய உருண்டைகளாக மாவைப் பெயர்தெடுத்து வைத்து அடைகளாகத் தட்டி, சூடான தோசைக் கல்லில் நெய் தடவிப் போட்டு சுடவும். திருப்பிப் போட்டு அடைகள் பொன்னிறமாகும் வரை தாராளமாக நெய் ஊற்றி சுட்டெடுக்கவும். பொட்டுக்கடலை சேர்க்காத தேங்காய் சட்னி மற்றும் இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்து உண்ணவும். கிரன்ச்சியான, ஆரோக்கியம் நிறைந்த சிற்றுண்டி இந்த அவரமணி அக்கி ரொட்டி!

இதையும் படியுங்கள்:
துரித சமையல்: ஒரு பிரியாணி - ஒரு பூந்தி - ஒரு பக்கோடா!
healthy foods in tamil

முருங்கை இலை கேழ்வரகு பக்கோடா ரெசிபி

தேவையான பொருட்கள்:

1.கேழ்வரகு மாவு ¼ கிலோ

2.முருங்கை இலை 2 கைப்பிடி

3.அரிசி மாவு 50 கிராம்

4.நறுக்கிய வெங்காயம் 1

5.மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

6.பெருஞ்சீரகம் ¾ டீஸ்பூன்

7.சீரகம் ½ டீஸ்பூன்

8.நறுக்கிய பச்சை மிளகாய் 1

9.வேர்க்கடலை பருப்பு 1 கைப்பிடி

10.உப்பு தேவையான அளவு

11. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

12.தண்ணீர் தேவையான அளவு

13.பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்

14.பட்டர் 50 கிராம்.

செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பக்கோடாக்களாக உதிர்த்துப்போட்டு மிதமான தீயில், வெந்து, கிரிஸ்பியாகும் வரை பொரித்து எடுக்கவும். சூடான, ஆரோக்கியம் நிறைந்த மாலை நேர ஸ்னாக்ஸ் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com