நவராத்திரி நிவேதனத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான ஃபுரூட் சாலட்டும், சம்பா அவலும்! (Healthy fruit salad and samba aval)

For Navratri offerings
Healthy fruit salad and samba aval!
Published on

நவராத்திரி ஃப்ரூட்ஸ் சாலட் (Healthy fruit salad and samba aval)

செய்ய தேவையான பொருட்கள்:

ஆப்பிள் -ஒன்று

அத்திப்பழம் -மூன்று

சப்போட்டா- இரண்டு 

வாழைப்பழம் -ஒன்று

முந்திரி, கருப்பு, பச்சை, சாதா உலர்  திராட்சை, பாதாம், பிஸ்தா, பேரீச்சை தலா- 10 

வெள்ளரி விதை- ஒரு டேபிள் ஸ்பூன்

நெய்- முந்திரி, சாதா திராட்சை வறுக்க தேவையான அளவு

தேன் -1 டேபிள் ஸ்பூன்

டயமன்ட் கல்கண்டு -ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வாழைப்பழத்தை தோலுரித்து அதனோடு சேர்த்து அனைத்து பழங்களையும் சிறுசிறு துண்டுகளாக்கவும்.  இதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மீது நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, சீவிய பாதாம், உப்பில்லாத உடைத்த பிஸ்தா, வெள்ளரி விதை, ஒரே சீராக நறுக்கிய பேரீச்சம்பழம், கழுவிய உலர்ந்த கருப்பு, பச்சை திராட்சை, டைமண்ட் கல்கண்டு ஆகிய அனைத்தையும்  கலந்து தேன் சேர்த்து கிளறி நிவேதனம் செய்யவும். 

இதையும் படியுங்கள்:
அவல் ஸ்பான்ஞ் தோசை - வர மிளகாய் சட்னி - முள்ளங்கி இலை துவையல்... செம தூள் மா! செய்வோமா?
For Navratri offerings

சம்பா அவல்

செய்ய தேவையான பொருட்கள்:

கெட்டி அவல்-1கப்

முந்திரி பருப்பு -10

வேர்க்கடலை பெரியது -10

பொடித்த மிளகு, சீரகம் தலா- ஒரு டீஸ்பூன் 

நறுக்கிய பச்சை மிளகாய் -ஒன்று 

வர மிளகாய்- ஒன்று

லெமன் ஜூஸ்- ஒரு டீஸ்பூன்

நெய் -இரண்டு டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு தேவையான அளவு 

கறிவேப்பிலை -ஒரு ஆர்க்கு

செய்முறை:

அவலை நன்றாகக் கழுவி ஊறவிடவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி, வேர்க்கடலையை வறுக்கவும். அதே வாணலியில் உள்ள நெய்யுடன் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை, வர மிளகாயை கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ஊறவைத்த அவல், பொடித்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி லெமன் ஜூஸ் விட்டுக்கிளறி இறக்கவும். சம்பா அவல் ரெடி. இதை ஒருநாள் நிவேதனமாக நவராத்திரி தினங்களில் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com